வெள்ளத்தில் தத்தளிக்கும் திருநெல்வேலி.. தாமிரபரணியில் 50,000 கனஅடி தண்ணீர்! மக்களுக்கு வார்னிங்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து 2வது நாளாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றிய இடங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை என்பது இன்று காலை வரை விடவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடையிடையே கனமழையும் பெய்து வருகிறது.

இதனால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 50.4 செமீ, நாலுமுக்கு, தெற்கு வீரவநல்லூர், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட இடங்களில் 26. செமீ, சுத்தமல்லியில் 24 செமீ, விக்கிரமசிங்கபுரத்தில் 22 செமீ, பாப்பாக்குடியில் 22 செமீ மழை பதிவாகி உள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது.

அதேபோல் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‛‛தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி பகுதிகள் மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி அணைகளில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் காரணமாக தாமிரபரணி சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சுமார் 41,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அபாய கட்டத்தை எட்டவில்லை என்ற போதிலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அவ்வப்போது வழங்கிடும் எச்சரிக்கைகளை ஏற்று நடந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்திடவும் வீடுகளில் போதிய அளவு குடிநீர் மற்றும் அவசரகால பயன்பாட்டுப் பொருட்கள், தேவையான மருந்து மாத்திரைகள், இருப்பு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவும் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை கவனித்து செயல்படவும், தாழ்வான பகுதிகள் இருப்பவர்கள் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறைகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் முகாம்களுக்கு சென்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு இன்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‛‛13.12.2024 கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வெள்ளம் செல்வதால் தாழ்வான பகுதகிளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியமாகும்.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications