குழந்தை பிறந்த 11வது நாளில் ஊரணியில் மூழ்கி தந்தை மரணம்.. நெல்லை அருகே சோகம்!
நெல்லை: நெல்லை அருகே குழந்தை பிறந்த 11வது நாளில் தந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வாசுவேதநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த அங்கப்பன் என்பவரின் மகன் மாரிச்சாமி. 32 வயதான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
மாரிச்சாமி கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்த பின் வெயில் களைப்பில் மாரிச்சாமி ஊரில் உள்ள ஊரணி திண்டில் படுத்து தூங்கினார்.

ஊரணியில் மூழ்கி
தூக்க கலக்கத்தில் எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்து விட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அப்படியே ஊரணியில் மூழ்கி விட்டார்.

போலீசாருக்கு தகவல்
காயம் காரணமாக அவரால் எழுந்து வரமுடியவில்லை. அப்படியே மூர்ச்சையாகி ஊரணியில் இறந்துவிட்டார். இதை பார்த்தவர்கள் உடனே வாசுதேவநல்லூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடலை தேடும் பணி
தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மாரிச்சாமியின் உடலை தேடினர். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் நேற்று காலை மீண்டும் உடலை தேடும் பணி தொடங்கியது.

குழந்தை பிறந்து 11 நாட்கள்
நீண்ட தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாரிச்சாமியின் முதல் பெண் குழந்தை செல்வ அரசிக்கு 3 வயதாகும் நிலையில் இரண்டாவது பெண் குழந்தை வேல்மதி பிறந்து 11 நாட்களே ஆகிறது. குழந்தை பிறந்து 11 நாட்களே ஆன நிலையில் தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications