Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: இன்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து வரும்நிலையில், கல்யாண பத்திரிகை ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?

மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள ஜனநாயக திருவிழா அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Amazing awareness for insisting on 100 and DO you know what are the Specialities in the Nellai Yellow colour Invitation

எம்பி தேர்தல் இன்றைய தினம் துவங்கி உள்ளது.. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவும் விறுவிறுவென நடந்து வருகிறது.. இந்த முறை தேர்தலில், 100 சதவீத வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இதை வலியுறுத்தியே, மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

விழிப்புணர்வு: அதாவது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்த இடங்கள் என்னென்ன என்பதை கண்டறிந்து, அங்கெல்லாம் கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழுக்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது.. அந்தவகையில், கடந்த மாதம், திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பலரையும் அசரடித்தது.

காரணம், தேர்தல் அழைப்பிதழ்களை, கல்யாண பத்திரிகை போல அச்சடித்துவிட்டார்கள்.. பிறகு, தாம்பூலம் வைத்து வீடு வீடாக சென்று கொடுத்து வந்தனர்.. இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்த்து நெல்லை மாவட்ட மக்களே வாயடைத்து போய்விட்டார்கள்.. மேளதாளம், தாம்பூல சீர்வரிசையுடன், தேர்தல் அழைப்பிதழை கொண்டுபோய் எல்லாருக்கும் தந்தார்கள்.

ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், "உரிமையை நிலைநாட்ட அன்பளிப்பு அளிப்பதும் பெறுவதும் பெரும் குற்றமாகும். எனவே அன்பளிப்பை தவிர்ப்பீர்" போன்ற வாசகங்களும் அந்த கல்யாண பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது.

இதோ இன்று வாக்குப்பதிவு என்பதால், வாக்குப்பதிவிற்கு அனைவரும் வருகை தர வேண்டும் என்பதால், மறுபடியும் ஒரு "பத்திரிகை", அச்சு அசல் கல்யாண பத்திரிகை போலவே அச்சடிக்கப்பட்டுள்ளது.

"ஜனநாயக திருவிழா அழைப்பிதழ்" என்ற பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ளது.. "ஜனநாயக கடமையை செய்வோம். இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்" என்ற வாசகங்களுடன், இணையத்தில் அந்த பத்திரிகை வைரலாகி கொண்டிருக்கிறது.

மக்களவை: அதுமட்டுமல்ல, மக்களவையில் வாதாடி நமக்கு நன்மைகள் செய்யக்கூடிய தன்னலமற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும், 5 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த அற்புத வாய்ப்பை தவறவிடாமல் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றிட அன்புடன் அழைக்கிறோம். பொறுப்புள்ளவர்களின் அடையாளம் வாக்களிப்பது, வாக்களிப்போம் ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம். உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்" என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது.

பத்திரிகையின் முதல் வரியே "கடவுள் துணை" என்ற இடத்தில், "இந்தியா தாய் நாடு" என்றும், மணமகன் பெயர் உள்ள இடத்தில் "வேட்பாளருக்கு" என்றும், மணமகள் பெயர் உள்ள இடத்தில், "ஓட்டு பதிப்பு" என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

ராமன், ராவணன்: மணமகள், மணமகன் உறவினர்கள் பெயர் அச்சிடப்படும் இடத்தில், "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை" எனக்கூறி ஓட்டு போடாமல் இருக்காதீர்கள். பொறுப்புள்ளவர்களின் அடையாளம் வாக்களிப்பது... வாக்களிப்போம் ஜனநாயகத்தை தழைக்க செய்வோம். உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம். 100 சதவீதம் வாக்களிப்போம்" என அச்சிடப்பட்டுள்ளது.

பொறுப்புள்ளவர்களின் அடையாளம் வாக்களிப்பது, வாக்களிப்போம் ஜனநாயகத்தை தழைக்க செய்வோம். உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம் என்ற வரிகளுடன் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது "மஞ்சள் அழைப்பிதழ்"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+