பெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை
நெல்லை: பெண்ணே உன்ன பார்த்தா போதும். வேற யாரும் வேணாமே என உருகி, மருகி போஸ்டர் ஒட்டி லாஸ்லியா ஆர்மியைச் சேர்ந்தவர்கள் அலப்பறை செய்துள்ளனர்.
அருள்மிகு நெல்லையப்பர் ஆனித் தேரோட்டத் திருவிழாவையொட்டி, லாஸ்லியா ஆர்மியினர் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சில வாரங்களை கடந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளருக்கு ஆர்மி, கிரியேட் செய்து கொண்டாடுவது வழக்கமாகி விட்டது. கடந்த சீசனில் ஓவியா ஆர்மிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இம்முறை இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசனுக்கு, ஆர்மி தொடங்கிய ரசிகர்கள், தலை மேல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
"அடியே லாஸ்லியா என்ன பாத்தியா" எனத் தொடங்கும் கானா பாடல் முதல் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸில் அவர் செய்யும், குறும்புதனமான பேச்சுகள், ஆனந்த தருணங்களை வைத்து, ஏராளமான டிக் டாக் வீடியோக்களையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையில் கிளிநொச்சியில் பிறந்த லாஸ்லியா, இலங்கையின் முதல் தமிழ் தொலைக்காட்சியான சக்தி டி.வி-யில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த சேனல் விஜய் டி.வி-யிலிருந்து நிகழ்ச்சிகளை வாங்கி ஒளிபரப்பியும் வருகிறது. பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டதற்குப் பிறகு லாஸ்லியாவின் பழைய செய்தித் தொகுப்புகளை யூ-டியூபில் தேடிப் பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications