Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க நடக்குது.. நெல்லையில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்! கோர்ட்டில் கொலையான மாயாண்டி! பறந்த கண்டனம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொலை வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்தவர், நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சாந்தி நகர் பகுதியில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கறிஞர்கள் ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

tirunelveli edappadi palaniswami mk stalin

அப்போது வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராகிவிட வந்த இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், சிறுது நேரத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்நிலையில், இளைஞரை கொன்ற கொலையாளிகள் காரில் ஏறி தப்பிய நிலையில் ஒருவரை வழக்கறிஞர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர், கீழநத்தத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பதும், கொலை வழக்கில் ஆஜராக வந்தவரை கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில்நீதிமன்ற வாயிலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்நிலையில், எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல. திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது முக ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!

இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செய்திகளில் வந்தவை, சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு, சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை, சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து.

"தனிப்பட்ட கொலைகள்" என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் திரு. மு.க.ஸ்டாலின்-ன் திமுக அரசு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது? நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத திரு. மு.க.ஸ்டாலினுக்கு -க்கு எனது கடும் கண்டனம். மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போட்டோஷூட்டிலும், மடைமாற்று அரசியலிலும் மட்டுமே செலுத்தும் கவனத்தை தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கை காப்பதிலும் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+