Crows: நெல்லையில் சுருண்டு விழுந்து செத்து மடியும் காகங்கள்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்து கிடக்கும் காகங்கள் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அண்மைக்காலமாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. காலை முதல் மாலை வரை வெப்ப அலை வீசுவதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.

Crows died of heat waves

இதனால் மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பில்லை. பறவைகள், விலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் குஞ்சுகளும் குட்டிகளும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றன.

அதிலும் அடிக்கும் வெயிலுக்கு நீர் நிலைகள் வேகமாக வற்றிக் கொண்டே வருவதால் கால்நடைகளும் நாய், காகங்கள் உள்ளிட்டவையும் தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றன.

இதனால் தண்ணீரை தேடி ஆங்காங்கே அலைந்து வருகின்றன. இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் நகரில் கடந்த சில தினங்களாக காகங்கள் ஆங்காங்கே அதிகளவில் சுருண்டு சுருண்டு விழுந்து இறந்து கிடக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே இறந்து கிடக்கிறது. இது வெயிலின் தாக்கத்தால் நடைபெறும் நிகழ்வா? அல்லது ஏதேனும் வைரஸ் பாதிப்பா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் காகங்கள் அடுத்தடுத்து செத்து மடிந்தன. அதன் மாதிரிகளை ஆய்வு செய்த போது அவை பறவைக் காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது.

பறவை காய்ச்சல் தொற்று, மனிதர்களுக்கு பரவும் என்பதால் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பொது இடங்களிலோ தங்கள் வீட்டு மாடிகளிலோ காகங்கள் இறந்து கிடந்தால் அவற்றை கையுறைகளை கொண்டு அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 1913 என்ற எண்ணிற்கு அழைத்து தெரியப்படுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த காகங்களை பாதுகாப்பாக அகற்றுவார்கள் என அறிவுறுத்தப்பட்டது.

அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நிறைய புறாக்களும் இறந்து கிடந்தன. காட்டாங்கொளத்தூர் அருகே கரும்பூர் ஏரியில் 30-க்கும் மேற்பட்ட புறாக்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

கரும்பூர் பகுதியை சுற்றியுள்ள 500 ஏக்கர் பரப்பில் நெல், வேர்க்கடலை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. இங்கு இரை தேடி புறாக்கள் வந்தன. அப்போதுதான் அவை செத்து மடிந்திருந்தன. அதுவும் வைரஸ் பாதிப்பால் இறந்ததா இல்லை யாரேனும் விஷம் வைத்து கொன்றனரா என்பதை விசாரித்து வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+