மதுரைக்கு போறீங்களா?..எந்தெந்த ரயில்கள் ரத்து.. மாற்றி இயக்கப்படும் ரயில்கள் எவை? முழு விபரம் இதோ
இரட்டை ரயில்பாதை இணைப்பு காரணமாக பல ரயில்கள் மதுரை செல்லாமல், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
நெல்லை: மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் மார்ச் மாதம் 7ம் தேதி வரை நடைபெற உள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பல்வேறு ரயில்கள் பகுதி தூரம் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மதுரை செல்லாமல், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றி இயக்கப்படும் ரயில்கள்
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் (22621), கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில் (22622), திருச்செந்தூர் - சென்னை செந்தூர் விரைவு ரயில் (16106), பிப்ரவரி 23 முதல் 27ம் தேதி வரை புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (16105) ஆகியவை மானாமதுரை வழியாக இயக்கப்பட உள்ளது.
வரும் 24ம் தேதியன்று புறப்பட வேண்டிய ஓஹா - தூத்துக்குடி ரயில் (19568), 26ம் தேதியன்று புறப்பட வேண்டிய தூத்துக்குடி - ஓஹா ரயில் (19567), மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847), மார்ச் 5,6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848), பிப்ரவரி 8 முதல் மார்ச் 5 வரை புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை ரயில் (16128), மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை - குருவாயூர் ரயில் (16127), பிப்ரவரி 9, 12, 16, 19, 23, 26 மார்ச் 2, 5 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில்(16352), பிப்ரவரி 9 16 23 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜம்மு ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - நெல்லை ரயில் (16788), பிப்ரவரி 11, 18, 25 மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹௌரா ரயில் (12666) ஆகிய ரயில்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - மும்பை ரயில் (16340), பிப்ரவரி 28 மார்ச் 1 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய மும்பை - நாகர்கோவில் ரயில் (16339), நாகர்கோவில் - கச்சுக்குடா ரயில் (16354), பிப்ரவரி 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சுக்குடா - நாகர்கோவில் ரயில் (16353), பிப்ரவரி 23 முதல் மார்ச் 2ம் தேதி வரை புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 23 முதல் மார்ச் 3ம் தேதி வரை புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில் (12661),பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய நெல்லை - சென்னை விரைவு ரயில் (12631), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை -நெல்லை ரயில்(16232), பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை கொல்லம் ரயில் (16101), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில் (16824), மார்ச் 1ம் தேதியன்று புறப்பட வேண்டிய நெல்லை- மும்பை தாதர் ரயில் (22630) ஆகியவையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732), மதுரை - ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில்கள் (06651/06652, 06653/06654, 06655/06656), திண்டுக்கல் - மதுரை - திண்டுக்கல் சிறப்பு ரயில்கள் (06609/06610), பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731), பிப்ரவரி 15 முதல் மார்ச் 7 வரை தேனி மதுரை சிறப்பு ரயில் (06702), பிப்ரவரி 16 முதல் மார்ச் 7 வரை மதுரை - தேனி சிறப்பு ரயில் (06701), பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை செங்கோட்டை - மதுரை சிறப்பு ரயில் (06664), செங்கோட்டை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06648), திருநெல்வேலி - செங்கோட்டை சிறப்பு ரயில் (06687), மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் (06663), ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16779), ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் (22621) கன்னியாகுமரி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (22622). சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605), காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில் (12606), மதுரை சென்னை மஹால் விரைவு ரயில் (22624), சென்னை - மதுரை மஹால் விரைவு ரயில் (22623), புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை விரைவு ரயில் (20601), மதுரை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (20602),புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861), கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862), தாம்பரம் - நாகர்கோவில் ரயில் (22657), நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (22658), நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு ரயில் (22667) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கோயம்புத்தூர் - நாகர்கோவில் விரைவு ரயில் (22628), திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/22628), பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் (17235), நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் (17236), சென்னை - நாகர்கோவில் விரைவு ரயில் (12667), நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668), திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் (06405/06409), கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721), மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722), விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் (16867), மதுரை - விழுப்புரம் ரயில் (16868), ஈரோடு - திருநெல்வேலி விரைவு ரயில் (16845), திருநெல்வேலி - ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே மதுரை செல்லும் பயணிகள் இந்த ரயில்களில் பயணத்தை தவிர்க்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications