தமிழகத்திலும் பீகார் மாடல்.. ஆட்சியில் பங்கு வேண்டும்! அதிரடியாகப் பேசிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!
நெல்லை: பிகார் மாடலில் தமிழகத்திலும் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணி அமைச்சரவை அமைய வேண்டும் என கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. மேலும். மத்திய அரசுக்கு எதிராக சிறு துரும்பையும் பெரிதாக்குவதே திமுகவின் அரசியல் உத்தியாக இருக்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி உடையார்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றில் தேவேந்திர குல வேளாளர்கள், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து கொடுப்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது.
அவர்களுக்கு குடிநீர், கழிவுநீரோடை, தெருச்சாலை, பேருந்து வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படுவதில்லை. மாநகராட்சி பகுதியைப் பொருத்தவரையில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி ஊத்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இரண்டு மாதமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படவில்லை. மலையிலிருந்து கீழே இறங்கி வாங்கிக் கொள்ளுமாறு கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேபோல், குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து வசதியும் இல்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
இது மறைமுக அங்குள்ள மக்களை பட்டினிச்சாவுக்கு தள்ளும் முயற்சி. இந்த போக்கை மாவட்ட நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை பெருமளவில் நடைபெற்று வருகிறது. ராதாபுரம், நான்குனேரி, சங்கரன்கோவில் பகுதிகளில் கல் குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டினுடைய தேவையைப் பொருத்து கனிம வளங்களை வெட்டி எடுக்க வேண்டும். ஆனால், இங்கே கேரளம், கர்நாடகம், மாலத்தீவு போன்றவற்றின் தேவைக்கு ஏற்ப இங்கே கல், மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இது தவறானது. ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போது அதிகாரிகளும் அதற்கு துணை போகிறார்கள். மாநில சுயாட்சி என்ற பெயரில் அனைத்து அதிகாரங்களும் தங்களுக்கு வேண்டுமென திமுக அரசு நினைக்கிறது. அனைத்து அதிகாரங்களும் இவர்களுக்கு கிடைத்தால் தமிழகத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வாழ முடியும்.
பெருமளவு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். மத்திய அரசுக்கு எதிராக சிறு துரும்பையும் பெரிதாக்குவதே திமுகவின் அரசியல் உத்தியாக இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக குற்றம் சுமத்துவது மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உதவாது. திமுகவின் இந்த நிலைப்பாடு மக்கள் மத்தியில் எடுபடாது.
பிகார் மாடலில் தமிழகத்திலும் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணி அமைச்சரவை அமைய வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் ஆட்சி அமைய வேண்டும். அதுபோன்ற ஆட்சி அமையும் என எதிர்பார்க்கிறேன். ஜனவரி மாதத்திற்கு பிறகு எங்களது கூட்டணி குறித்து அறிவிப்போம்" என்றார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications