மனுநீதியா.. சமநீதியா? மனுவின் சிலை அகற்றப்பட வேண்டும்.. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பேச்சு
திருநெல்வேலி: இந்தியாவில் மனுவுக்கு சிலை இருப்பதாகவும் அது அவமானத்தின் சிலை, எனவே உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
மனு நீதி, சனாதனம் குறித்து சமீப காலமாக விவாதங்கள் அதிகரித்த வருகின்றன. கடந்த ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

"இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்" என பேசியிருந்தார்.
இதற்கு திமுக அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலிருந்து சிறு சிறு எதிர்ப்புகளே மேலெழுந்தது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் பெரிய அளவில் இதை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் இதையே பாஜக தனதுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. இந்தியா கூட்டணி சனாதன எதிர்ப்பை ஆதரிக்கிறது என்று தேர்தல் பிரசாரம் செய்தனர். வடமாநிலங்களில் இந்த பிரசாரம் பாஜகவுக்கு பெருமளவு கைகொடுத்து.
இது தொடர்பான வழக்கு பீகார், கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் மனுவுக்கு சிலை இருப்பதாகவும் அது அவமானத்தின் சிலை, எனவே உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் 7-வது பொருநை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை புத்தக திருவிழாவில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் பங்கேற்றிருந்த சந்துரு இவ்வாறு கூறியுள்ளார். அவர் பேசியதாவது,
"தமிழகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளார். ஆனால், ராஜ்பவனில் உள்ளவர் அவருக்கு காவி உடை அணிவித்து அழகு பார்க்கிறார். திருவள்ளுவர் காவி உடை அணிந்திருந்தால் இதனை சொல்லி இருக்க மாட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனதான ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என்று பேசினார்.
இதற்காக உத்தரபிரதேசத்தில் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுவதற்கு 10 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலினோ 'இரண்டு ரூபாய் கொடுங்கள் போதும். நான் என் தலையை சீவிக் கொள்கிறேன்' என விளையாட்டாக கூறினாலும் அதில் பல அர்த்தங்கள் உள்ளன. மனு சாஸ்திரத்தில் பல காலகட்டங்களில் பல்வேறு விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பிறப்பாலேயே சமமற்ற தன்மையை உருவாக்குவதுதான் மனுதர்மம் என்ற சாஸ்திரம். ஜாதியை பிரிவினை பேசுவதாகவே மனுதர்மம் உள்ளது. இந்தியாவிலே மனுவுக்கு என்று ஒரு சிலை உள்ளது. அது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் அமைந்துள்ளது. அது அவமானத்தின் சிலை. சென்னையில் மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கருக்கு சிலை உள்ளது. அதுவும் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து பூட்டி வைத்திருக்கிறோம். ஆனால் மனு சிலைக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.
மதச்சார்பற்ற, இறையாண்மை மிகுந்த நாடாக இந்தியா தொடர வேண்டுமானால் மக்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும். மனுநீதியா, சமநீதியா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications