கொட்டி தீர்த்த கனமழை! திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்பதால், தற்போது 5 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

school rain

இது சூப்பர் எல்-நினோ ஆண்டு. எனவே வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில நாட்களாக சென்னை தொடங்கி டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என டெல்டா மாவட்டங்கள் தொடங்கி, திருநெல்வேலி, தூத்துக்கு மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

கனமழை மேலும் நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரி, காரைக்காலிலும் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. எனவே இந்த பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+