திருநெல்வேலியில் வீடு வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடிய.. தாணப்பன் சிக்கியது எப்படி?
திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக வீடு, வீட்டுக்கு வெளியே காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருட்டுப்போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வீடு வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கண்டுபிடித்ததுடன், தேடி பிடித்து கைது செய்தனர்.
என்ன தான் சட்டம் போட்டாலும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. பெண்களை தங்கள் இச்சைக்கு அனுபவிக்கும் போகப்பொருளாக நினைப்பவர்கள். சநதர்ப்பம் கிடைத்தால் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். அதனால் கடந்த சில ஆண்டுகளாக குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்களை தவறாக பார்ப்பது ஒருபுறம் எனில், அதற்கு அவர்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் என்று குறை சொல்லும் கேவலமும் இங்கு அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்களை தடுக்க போக்சோ சட்டம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க வன்கொடுமை தடுப்பு சட்டம் என பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. இந்த சட்டங்களில் கைதானால் ஜாமீன் கிடைப்பதே சவாலானது. விரைவு நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி விரைந்து நீதிபெற்றுவிட முடியும். இவ்வளவு சட்டங்கள் இருந்தாலும், பெண்களை பற்றிய பார்வையும், புரிதலும் சிலருக்கு தவறாகவே உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களாக இருப்பார்கள், நண்பர்களாகவும் இருப்பார்கள், தாத்தா வயதில், அப்பா வயதில் இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால், மோசமான வக்கிரத்தை வெளிப்படுத்திவிடுகிறார்கள். வக்கிர எண்ணம் படைத்த பலர் இன்றும் சுதந்திரமாகவே உலா வருகிறார்கள். அவர்களை கண்டுபிடிப்பது சவாலானதாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் வீட்டை திறக்க தனியாக சென்று பிளஸ் 1 மாணவியை பின்னால் இருந்து வந்த மர்ம நபர், கைக்குட்டையில் மயக்க மருந்தை கலந்து, அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். அவர் யார் என்றே அந்த பெண்ணுக்கு இன்று வரை தெரியவில்லை.. இதேபோல் சில மர்ம நபர்கள்,தனியாக செல்லும் பெண்களிடம் அத்துமீறுவது நடக்கிறது. இவர்களை அடையாளம் காண்பது ஒருபுறம் எனில், பெண்களின் உள்ளாடைகளை எடுத்து செல்லும் நபர்களும் இருக்கிறார்கள்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியே காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருட்டுப்போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை நைசாக திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தனர்.
அதன்படி போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். இதில், நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த தாணப்பன் (வயது 52) என்பவர் பல்வேறு இடங்களில் பெண்களின் உள்ளாடைகளை நைசாக திருடிச் சென்றது தெரியவந்தது. தாணப்பன், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications