இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அணி மாற தயார்... தங்கதமிழ்செல்வன் பளீச்
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அவர்களுடன் இணைந்து கொள்வதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
நெல்லை: இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அவர்களுடன் இணைந்து கொள்வதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டு அணிகளாக உடைந்து தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. அதே நேரம், தங்களது அணியில் இணையுமாறு, அதிமுகவும், அமமுகவும் மாறி, மாறி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிய தலைமையை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.
பாஜகவுடன் அ.ம.மு.க. கூட்டணி கிடையாது என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி திருந்தி எங்களுடன் வந்து சேரவேண்டும். இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், நாங்கள் அதிமுகவிற்கு வருகிறோம், நாங்கள் வெற்றி பெற்றால் அதிமுகவினர், அமமுக-விற்கு வரட்டும் என்றும் கூறினார்.
முன்னதாக, அதிமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்த, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications