கிணற்றில் தள்ளிவிட்டார்களே... படுபாவிகள்... தோல்வியை ஜீரணிக்க முடியாமல் உருண்டு புரண்ட வேட்பாளர்..!
நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே தேர்தலில் தோல்வி உறுதியானதை அடுத்து, பெண் வேட்பாளர் ஒருவர் தரையில் உருண்டு புரண்டு அழுத நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் ருசிகர நிகழ்வு நடந்து வருகிறது.
ஒரு ஓட்டில் வெற்றி, 90 வயதில் ஊருக்கு தலைவர், 21 வயதில் ஊருக்கு தலைவர் என பல சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன.

பெண் வேட்பாளர்
அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து ஒன்றில் பெண் ஒருவர் 'கிணறு சின்னத்தில்' வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். போடுங்கம்மா ஓட்டு கிணறு சின்னத்தை பார்த்து என தனது குடும்பத்தினருடன் ஓட்டுக்கேட்டு அலைந்த அந்த பெண் வேட்பாளருக்கு, நேற்றைய தினம் வெளியான தேர்தல் முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கிணறு சின்னம்
பாளையங்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று காலை முதல் தேர்தல் முடிவை அறிந்து வந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் தனது தோல்வி உறுதியானது தெரிய வந்துள்ளது. பெண் என்பதால் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் ஆற்றாமையை உடனடியாக வெளிப்படுத்தத் தொடங்கினார். ''கிணறு சின்னத்தில் ஓட்டுப்போடுகிறேன் எனக் கூறி என்னை இப்படி கிணற்றில் தள்ளிவிட்டார்களே, படுபாவிகள்'' என தனக்கு வாக்களிக்காதவர்களை சாடினார்.

உருண்டு புரண்டு
வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே உருண்டு புரண்டு அழத் தொடங்கினார். இதையடுத்து அங்கிருந்த பெண் காவலர்கள் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கிணறு சின்னத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் இப்படி கதறி அழுவார் என அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனிடையே இதே போன்று இன்னும் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் 9 மாவட்டங்களிலும் பல இடங்களில் நடந்துள்ளன.

கிராமங்களில்
தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கும் பலரை அவரை சுற்றியிருப்பவர்கள் இப்படித்தான் உசுப்பிவிட்டு ஆசை வார்த்தைகளை கூறி தேர்தலில் போட்டியிட வைப்பார்கள். யார் தேர்தலில் போட்டியிட வேண்டும் நிர்பந்தித்தாரோ அதே நபர் மற்றவர்களிடம் சென்று, இவருக்கெல்லாம் இது தேவையா எனவும் கொளுத்திப் போடுவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் இது போன்ற கூத்துக்கள் எல்லாம் சகஜம் தான்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications