கொலையில் முடிந்த இன்ஸ்டா காதல்! நம்ப வைத்து காதலனை கழுத்தறுத்த பெண்ணின் அண்ணன்! பதறிப் போன நெல்லை!
திருநெல்வேலி: நெல்லை அருகே காதலியை பார்க்கச் சென்ற காதலன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளம் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் காதல் கொலையில் முடிந்த பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அண்ணா தெருவை சேர்ந்த சிம்சன் என்பவரது சகோதரியான ஜெனிபர் சரோஜா உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆரம்பத்தில் நட்பு ரீதியாக பழகி வந்த இருவரும் காலப்போக்கில் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விஜய் ஜெனிபர் சரோஜாவை காதலிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இவர்களது காதல் பயணம் தொடர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஜெனிபர் சரோஜா விஜய்யை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். தொடர்ந்து விஜய்யின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் சகோதரி கணவரை பிரிந்து அவருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது தனது சகோதரி இருக்கும் சூழலில் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது, சிறிது நாள் சென்றதும் தனது குடும்பத்தினரை அழைத்து வந்து பெண் கேட்பதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வோம் எனக்கூறி ஜெனிபர் சரோஜாவை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே ஜெனிபர் சரோஜாவை காணவில்லை என அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில் காதலனை தேடி கள்ளக்குறிச்சி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்து காதலை கைவிட்டு விடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் திருமணம் செய்து கொண்டால் விஜய்யை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியிருக்கிறார். தொடர்ந்து பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறிய நிலையில் எங்கே தன்னை பிரித்து விடுவார்களோ என அச்சப்பட்ட சரோஜா கடந்த 28ஆம் தேதி வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது தங்கையின் தற்கொலை முயற்சிக்கு விஜய் தான் காரணம் என ஆத்திரமடைந்த சிம்சன் திருநெல்வேலிக்கு வருமாறு வீட்டில் பேசி திருமணம் முடித்து வைப்பதாக கூறியுள்ளார். இதை அடுத்து கள்ளக்குறிச்சியில் இருந்து விஜய் இன்று காலை திருநெல்வேலி வந்திருக்கிறார். காலை 7.30 மணி அளவில் திருநெல்வேலிக்கு வந்த அவர் அங்கிருந்து சாந்தி நகர் பகுதிக்கு வந்திருக்கிறார்.
அப்போது விஜய்க்கும் சிம்சனுக்கும் அப்போது விஜய்க்கும் சிம்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சிம்சன் தனது நண்பர் சிவாவுடன் சேர்ந்து கட்டை அரிவாள் உள்ளிட்ட பொருட்களால் விஜய்யை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் விஜய் தாக்கப்பட்டதை கண்ட அருகில் இருந்தோர் திருநெல்வேலி காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.
கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சிம்சன் தனது நண்பர் சிவாவுடன் சேர்ந்து கட்டை அரிவாள் உள்ளிட்ட பொருட்களால் விஜயை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் விஜய் தாக்கப்பட்டதை கண்ட அருகில் இருந்தோர் திருநெல்வேலி காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.
தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விஜய்யின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜெனிபர் சரோஜாவின் சகோதரர் சிம்சன் மற்றும் அவரது நண்பனான சிவா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அண்ணா தெருவை சேர்ந்த சிம்சன் என்பவரது சகோதரியான ஜெனிபர் சரோஜா உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் நட்பு ரீதியாக பழகி வந்த இருவரும் காலப்போக்கில் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விஜய் ஜெனிபர் சரோஜாவை காதலிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இவர்களது காதல் பயணம் தொடர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஜெனிபர் சரோஜா விஜயை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். தொடர்ந்து விஜயின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் சகோதரி கணவரை பிரிந்து அவருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது தனது சகோதரி இருக்கும் சூழலில் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது, சிறிது நாள் சென்றதும் தனது குடும்பத்தினரை அழைத்து வந்து பெண் கேட்பதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வோம் எனக்கூறி ஜெனிபர் சரோஜாவை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே ஜெனிபர் சரோஜாவை காணவில்லை என அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில் காதலனை தேடி கள்ளக்குறிச்சி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்து காதலை கைவிட்டு விடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் திருமணம் செய்து கொண்டால் விஜையை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியிருக்கிறார். தொடர்ந்து பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறிய நிலையில் எங்கே தன்னை பிரித்து விடுவார்களோ என அச்சப்பட்ட சரோஜா கடந்த 28ஆம் தேதி வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது தங்கையின் தற்கொலை முயற்சிக்கு விஜய் தான் காரணம் என ஆத்திரமடைந்த சிம்சன் திருநெல்வேலிக்கு வருமாறு வீட்டில் பேசி திருமணம் முடித்து வைப்பதாக கூறியுள்ளார். இதை அடுத்து கள்ளக்குறிச்சியில் இருந்து விஜய் இன்று காலை திருநெல்வேலி வந்திருக்கிறார். காலை 7.30 மணி அளவில் திருநெல்வேலிக்கு வந்த அவர் அங்கிருந்து சாந்தி நகர் பகுதிக்கு வந்திருக்கிறார்.
அப்போது விஜய்க்கும் சிம்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சிம்சன் தனது நண்பர் சிவாவுடன் சேர்ந்து கட்டை அரிவாள் உள்ளிட்ட பொருட்களால் விஜயை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் விஜய் தாக்கப்பட்டதை கண்ட அருகில் இருந்தோர் திருநெல்வேலி காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.
தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விஜயின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜெனிபர் சரோஜாவின் சகோதரர் சிம்சன் மற்றும் அவரது நண்பனான சிவா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications