டார்ச் லைட் எங்கே? திசையன்விளை கடையில் ஜெயக்குமார் தனசிங்! புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
நெல்லை: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடையில் டார்ச் லைட் வாங்கிய புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நெல்லை காங்கிரஸ் தலைவர் கே.வி.கே.ஜெயக்குமார் கடந்த மே 2 ஆம் தேதி திசையன்விளையில் ஒரு கடையில் டார்ச் லைட் வாங்கி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்த சிசிடிவியில் ஜெயக்குமார் ஒரு கடையில் ஏதோ பொருட்களை வாங்க வந்துள்ளார். அவர் வியர்வையை தன்னிடம் இருந்த கைக்குட்டையால் துடைக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் பில்லிங் கவுன்ட்டரில் ஒரு சிவப்பு நிற டார்ச்லைட்டை வாங்கி அதை கடைக்காரர் பேட்டரி போட்டு எரிய வைத்து காட்டுகிறார். இப்படியாக இந்த சிசிடிவி காட்சிகள் உள்ளன.
ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தோட்டத்தில் இந்த டார்ச் லைட்டை காணவில்லை, ஒரு வேளை அதுவும் நெருப்பில் எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே ஜெயக்குமார் பயன்படுத்திய இரு செல்போன்களையும் காணவில்லை. இதை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 2 ஆம் தேதி முதல் காணவில்லை என அவருடைய மகன் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் பாதி எரிந்த நிலையிலான உடல், அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயக்குமார் ஏதோ ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஒரு சில கடிதங்கள் தங்களுக்கு வரவில்லை என நெல்லை மாவட்ட காவல் துறை மறுத்துள்ளது. இந்த மர்ம மரணம் தொடர்பாக 7 தனிப்படைகளை அமைத்து எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு அவருடன் யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்தெல்லாம் தனிப்படையினர் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. அவரது வயிற்றுக்கு மேல் இரும்பு தகடு இருந்தது கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவரது கை,கால்கள் மின் வயரால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் ஜெயக்குமார் கடையில் டார்ச் லைட் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்றும் 6ஆவது நாளாக ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications