திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மையத்தில் இருப்பவர்கள் மய்யத்துக்கு வாங்க என கமல் அழைப்பது யாரை?

Google Oneindia Tamil News

Recommended Video

    திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் -வீடியோ

    நெல்லை: மக்கள் நீதி மய்யத்துக்கு வருமாறு கமல்ஹாசன் யாரை அழைக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கடந்த ஆண்டு 22-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சி தொடங்கி கடந்த 22-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு விழா முடிந்தது. 2-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நெல்லையில் நடைபெற்றது.

    இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகையில் வரலாமா வேண்டாமா என மையத்தில் இருப்பவர்கள் மய்யத்துக்கு வாங்க என அழைப்பு விடுத்தார் கமல்ஹாசன்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    இவர் யாரை அழைக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் கட்சியை தொடங்குவதாக கடந்த ஆண்டு கூறிய ரஜினிகாந்த் இன்னும் தொடங்கவில்லை. சரி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாவது தொடங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ரஜினி மக்கள்

    ரஜினி மக்கள்

    ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினியின் அறிவிப்பின் மூலம் அதுவும் இல்லை என்றாகிவிட்டது. ரஜினி அறிவிக்கையில் , நமது இலக்கு சட்டசபை தேர்தல்தான். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது என ரஜினிகாந்த் அறிவித்தார்.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    அதே நாளில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், சண்டை போடுவதற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து விட்டு களத்தில் நின்று கொண்டு நான் இப்போது வரவில்லை. அப்புறம் வருகிறேன் என்றால் எப்படி. அது போல் சாப்பிட வந்துவிட்டார்கள். இலையும் வைக்கப்பட்டு உணவு பரிமாறப்படும் போது நான் இப்போது சாப்பிடவில்லை. இன்னொரு நாள் சாப்பிடுகிறேன் என்றால் அப்போ ஏன்யா சாப்பிட வந்தே என்ற கேள்வி வருகிறது என ரஜினியை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

    இரண்டாவது முறை

    இரண்டாவது முறை

    கடந்த ஆண்டு ஒரு முறை ரஜினி, சிவாஜி மணிமண்டப நிகழ்ச்சியில் பேசிய போது அரசியலில் வெற்றி பெற வேண்டுமென்றால், சினிமா புகழ் மட்டும் போதாது.அதற்கு மேல் தேவைப்படுகிறது. அது மக்களுக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது.கமலுக்கு தெரியும் என நினைக்கிறேன். தெரிந்திருந்தால் எனக்கு சொல்ல மாட்டார். ஒருவேளை 2 மாதத்திற்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருக்கலாம். நீங்கள் அரசியலில் மூத்தவர் சொல்லுங்கள் என்றால் நீ என் கூட வா சொல்றேன் என்கிறார் என்றார் ரஜினி. அது போல் தற்போதும் ரஜினியை மக்கள் மய்யத்தில் இணைந்து விடுமாறு கமல் அழைக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லை, கூட்டணி வர தயங்கும் கட்சியினரை அழைக்கிறாரா என தெரியவில்லை.

    English summary
    Makkal Needhi Maiam President Kamal Haasan invites someone who are in dilemma may come to his party. He didnt not mentioned whether its a invitation to Rajinikanth or Other Political Parties?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X