"அக்கா, ப்ளீஸ்".. நச் செல்பி.. வயல்வெளியில் களை எடுத்து.. ஒரே நாளில் தென்காசியை தெறிக்கவிட்ட கனிமொழி

சிறுமியுடன் கனிமொழி எடுத்து கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

தென்காசி: ஒரே நாளில் தென்காசியை தெறிக்க விட்டுவிட்டார் கனிமொழி.. இதனால் தென்காசி மாவட்ட திமுகவினர் படுகுஷியில் உள்ளனர்.

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். முதல் நாளான இன்று தென்காசி வடக்கு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். கரிவலம்வந்தநல்லூர் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Kanimozhi MP selfie with a girl in Thenkasi Campaign

பொதுவாக ஒரு மாவட்டத்துக்கு கனிமொழி பிரச்சாரம் செய்ய வந்ததால், முக்கியமான அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிடுவார்.. தன்னை நாடி வரும் மக்களின் கோரிக்கையையும் நின்றுபொறுமையாக கேட்டுவிட்டு செல்வார்.. சில சமயம், ஆன் தி ஸ்பாட்டில் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி திக்குமுக்காட வைப்பார்.

அப்படித்தான், கோமதிமுத்துபுரத்தில் மக்களை சந்தித்தார் கனிமொழி.. அங்கு உள்ள ஊர்புற நூலகத்துக்கு சென்று, பார்வையிட்டு வாசகர்களிடம் உரையாடினார்... அந்த நூலகத்துக்கு தனி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கவும், அதற்கு உடனடி ஒப்புதல் தந்தார்..

பிறகு, வாசுதேவநல்லூர் வயல் பகுதியில் சென்றார்.. பெண்கள் அங்கு களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.. அவர்களுடன் சேர்ந்து, கனிமொழியும் களையெடுத்தார்.. பிறகு அந்த பெண்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இப்படி ஒவ்வொரு இடத்திலும் கனிமொழி அந்தந்த பகுதி மக்களுடன் நெருங்கியே இருக்கிறார்.. ஒரு இடத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து காரில் வேறு ஒரு பகுதிக்கு செல்ல முயன்றார்.. அப்போது ஒரு சிறுமி, செல்பி என்று ஓடிவரவும், அப்படியே காரை நிறுத்தி விட்டார் கனிமொழி.. காருக்குள் உட்கார்ந்தபடியே சிறுமியுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டார்.. அந்த குழந்தை செல்போனை தன் கையில் பிடித்தபடி கனிமொழியுடன் செல்பி எடுக்கும் இந்த போட்டோதான் இணையத்தில் படு வைரலாகி வருகிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+