குன்றத்தூர் அபிராமிக்கு தண்டனை இல்லையா? நெல்லை பிருந்தா வாழை தோட்டத்துக்கு ஏன் போனார்? இவரும் பெண்ணா

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.. திருமணமான ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும்சரி, இறுதியில் உலகமறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள்தான் கள்ளக்காதல் சம்பவங்களுக்காக காவு வாங்கப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த கலக்கங்களும், வருத்தங்களும் நிலவும் சூழலில், திருநெல்வேலியில் நடந்துள்ள சம்பவம் மொத்த பேருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. வாழைத்தோப்பில் பச்சிளம் குழந்தைக்கு என்ன நடந்தது?

கள்ளக்காதல் கொலைகள் வடமாநிலங்களில் அதிகரித்து வருகின்றன.. அதிலும் கணவன்மார்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.. கடந்த வாரம், உத்தரபிரதேசத்தில் தாலி கட்டிய கணவனை உயிரோடு மண்ணில் தோண்டி புதைத்துவிட்டார் ஒரு பெண்.. இதை பார்த்த ஒரு கணவர், தன்னுடைய உசுரை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக, கள்ளக்காதலில் இறங்கிய தன்னுடைய மனைவியை, அந்த கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்துவைத்துவிட்ட சம்பவமும் நடந்துள்ளது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.. முறைதவறிய பெண்களால், குடும்ப வன்முறைகள் பெருகி வருகின்றன.. இதற்கு குன்றத்தூர் அபிராமியை உதாரணமாக சொல்லலாம்.

Kundrathur Abirami Tirunelveli Nellai

குன்றத்தூர் அபிராமி

கடந்த 2018-ல் குன்றத்தூர் அபிராமி என்றாலே தமிழகத்தில் பிரபலம்.. சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு இப்போது 37 வயதாகிறது.. டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்.. கணவர் பெயர் விஜய். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு அஜய், கார்னிகா ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.
அபிராமி வசிக்கும் பகுதியிலேயே பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.. இங்க அடிக்கடி தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று வந்துள்ளார் அபிராமி.. சில சமயங்களில் கடைக்கு போனில் ஆர்டர் செய்தும் பிரியாணியை வரவழைதது சாப்பிட்டு வந்துள்ளார்..

அப்படி வீட்டுக்கு பிரியாணி ஆர்டர் செய்தால், அதை சுந்தரம் என்பவர்தான் வீட்டுக்கு கொண்டு வந்து தந்திருக்கிறார்.. அப்போது அபிராமி - சுந்தரம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.. இதையடுத்து, கணவருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில் விஜய்யின் காதுகளுக்கு இது எட்டியதுமே, குடும்பத்தில் தகராறு வெடித்தது..

பிரியாணி கடைக்காரர்

இதற்கு பிறகு, சுந்தரத்துடன் போனில் பேசக்கூடாது என்றும், குழந்தைகளை கவனித்து கொள்ளுமாறு அபிராமிக்கு அட்வைஸ் தந்து வந்துள்ளார்.. இதனால், சுந்தரத்துடன் போனில் கூட பேச முடியாத நிலைமைக்கு ஆளானதுமே அபிராமி கொந்தளித்து விட்டார்.. அப்படியானால், இந்த உறவுக்கு, குழந்தைகள்தான் முதல் எதிரி என்று நினைத்த அபிராமி,, பெற்ற குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார. குழந்தைகள் இல்லாவிட்டால் சுந்தரத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் நம்பினார்..

குழந்தைகளை கொலை செய்ய கள்ளக்காதலன் வாங்கி தந்த தூக்க மாத்திரையை, பாலில் கலந்தார் அபிராமி.. குழந்தைகள் இரவு தூங்க செல்லும்போது, இதை குடிக்க வைத்துவிட்டார்.. பிறகு, அக்குழந்தைகளின் கழுத்தையும் நெரித்து கொன்றார். இறுதியில், வீட்டை விட்டு வெளியேறி சுந்தரத்துடன் சென்றுவிட்டார்.. இதற்கு பிறகு, கணவர் விஜய் தந்த புகாரின்பேரில் அபிராமி கைதானார்.. அபிராமி பச்சிளம் குழந்தைகளை கொன்ற விதமும், அவர் தந்திருந்த வாக்குமூலமும் தமிழகத்தையே அதிர வைத்தது.

தீர்ப்பு எப்போது வெளியாகும்

சிறையில் இருக்கும்போது, அபிராமி மனம் வருந்தியிருக்கிறார் அபிராமி.. "தப்பு பண்ணிட்டேன்.. என் குழந்தைகளை கொன்றிருக்கக் கூடாது.. அவங்க போட்டோவையாவது என்கிட்ட காட்டுங்க" என்று கதறி அழுதாராம்..

இதனிடையே, அபிராமி தொடர்பான வழக்கு முற்றிலும் நடந்து முடிந்துவிட்டதாகவும், குற்றமும் நிரூபணமாகி விட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக போவதாகவும் கடந்த வருடமே செய்திகள் கசிந்திருந்தன.. ஆனால், அபிராமி வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை. எனினும், நாளுக்கு நாள், அடுத்தடுத்த அபிராமிகள் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.. இதோ நெல்லையில் நேற்று ஒரு கொடுமை நடந்துள்ளது.

கட்டிலில் இருந்து கீழே விழுந்த குழந்தை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா.. இவருக்கு 27 வயதாகிறது.. இவரது கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு தர்ஷினி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது..

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு, தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்து, குழந்தை இறந்து விட்டது என்று அழுதுகொண்டே சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு பதறிய அம்மா, "குழந்தை எப்படி இறந்தது? என்று கேட்டிருக்கிறார். கட்டிலில் இருந்து தவறி விழுந்து, மண்டை உடைந்து இறந்துவிட்டதாக பிருந்தா சொல்லி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்மா, கட்டிலிலிருந்து கீழே விழுந்தால் குழந்தை உயிர் போகுமா? என்று சந்தேகம் அடைந்திருக்கிறார்.. பிறகு, உடனடியாக மகளின் வீட்டுக்கு விரைந்து வந்து, குழந்தை தர்ஷினியை திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். டாக்டர்கள் பரிசோதித்தபோதுதான், குழந்தை ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது..

அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள்

அப்போது குழந்தையை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. காரணம், குழந்தையின் உதடு உட்பட உடலில் இடங்களில் காயங்கள் இருந்துள்ளன.. அதற்குள் இதுகுறித்து தகவலறிந்து வந்த திசையன்விளை போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதால் அடித்து கொன்றிருக்கலாம் என்பதால், பிருந்தாவிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போதுதான், பிருந்தாவின் கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானது.. அதாவது, நேற்று முன்தினம் இரவு, மகாதேவன்குளம் அருகே வாழை தோட்டத்திற்கு, தன்னுடைய 2 ஆண் நண்பர்களுடன் பிருந்தா சென்றிருக்கிறார்.. அப்போது ஆண் நண்பர் ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு, இன்னொரு ஆண் நண்பருடன் தனியாக இருந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் இறந்த நிலையிலேயே அந்த குழந்தையை, பிருந்தாவிடம் ஆண் நண்பர் தந்திருக்கிறார்.

ஆண் நண்பர்கள்

குழந்தை எப்படி இறந்தது என்று பிருந்தா கேட்டதற்கு, அந்த ஆண் நண்பர் சரியாக பதில் சொல்லவில்லையாம். அதற்கு பிறகுதான், மறுநாள் காலையில் பிருந்தா தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று, குழந்தை கட்டிலிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக சொல்லி உள்ளார்..
தகாத உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. இப்போது பிருந்தாவின் ஆண் நண்பர்கள் 2 பேரிடமும் விசாரணை நடக்கிறது. ஆனால், குழந்தை எப்படி இறந்தது? அந்த ஆண் நண்பர், இரண்டரை வயது குழந்தையை ஏன், எதற்காக கொன்றார் என்றும் தெரியவில்லை.

அபிராமிகள் அட்டகாசம்

இப்படி உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளை, பெற்ற தாயே துடிதுடிக்க கொல்வதையும், சித்ரவதை செய்வதையும் நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை.. இதுபோன்ற "அபிராமிகளின்" அட்டகாசங்களும் இன்னமும் அடங்குவதுமில்லை... அபிராமி போன்றோருக்கெல்லாம் தண்டனையும் தரப்படவில்லை.. ஒவ்வொரு தாமதமான தீர்ப்புதான், இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடப்பதற்கு காரணமாகி கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியிருக்கிறது..!

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+