நெல்லையை திணற வைத்த தீபக் ராஜா கொலை! போலீஸிடம் சிக்கிய ‘முக்கிய’ குற்றவாளி! ஸ்கெட்ச் இவரா?
நெல்லை: கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான நவீன் மற்றும் லெஃப்ட் முருகன் தப்பியோட முயற்சித்த நிலையில், கீழே விழுந்ததில் இருவரும் காயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா(30). இவர் கடந்த திங்கட்கிழமை தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை, அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நெல்லை தீபக் ராஜா: தனது கண்முன்னே காதலனை வெட்டி கொலை செய்ததைக் கண்டு தீபக் ராஜாவின் காதலி கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல ரவுடி: குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாதி பின்னணியோடு அடிக்கடி மோதி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பசுபதி பாண்டியன் ஆதரவாளர்: மேலும் தீபக் ராஜா கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. எனவே ஜாதி மோதல் காரணமாகவே தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். குறிப்பாக சம்பவம் நடைபெற்ற ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர்.
முக்கிய குற்றவாளி: இந்த கொலை சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . கொலை வழக்குக்கு மூளையாக செயல்பட்டது பிரபல ரவுடியான லெஃப்ட் முருகன் மற்றும் நவீன் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதி: இதனையடுத்து அவர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது லெப்ட் முருகனும் நவீனும் தப்பிச்செல்ல முயன்றதாகவும் அப்போது அவர்களுக்கு கால் மற்றும் கையில் அடிபட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை தீபக் ராஜா கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காதலியின் தோழி: தீபக் ராஜாவை கொலை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் நவீனுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவரை நோட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் காதலியின் தோழிகளுக்கு விருந்தளிப்பதற்காக தீபக் ராஜா அவர்களை அழைத்துள்ளார். இந்நிலையில் காதலியின் தோழி ஒருவர்தான் நவீனுக்கு தீபக் ராஜாவின் வருகையை தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையிலேயே நவீன் தனது அடியாட்களுடன் சேர்ந்து ஹோட்டல் முன்பாக காத்திருந்திருக்கிறார் . அப்போது தீபக் ராஜா காதலி மற்றும் அவரின் தோழிகளோடு வந்தபோது அவரை வெட்டி கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து தீபக் ராஜாவின் காதலியின் தோழியும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications