குடும்பக் கௌரவம் என்ற போலி பிம்பம்.. நெல்லையில் 23 வயது பெண்ணுக்கு தம்பியால் நடந்த முட்டாள்தனம்
நெல்லை : தனது அக்காள் செல்போனில் அடிக்கடி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தம்பி, ஒரு கட்டத்தில் அக்கா அதனை கேட்க மறுத்ததால், அதற்கு எதிர்வினையாக செய்த செயல் இன்று குடும்பத்தையே ஆடிப்போக வைத்துள்ளது. நெல்லை அருகே செல்போனில் அடிக்கடி பேசிய அக்காவை தம்பி என்ன செய்தார்.. என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.
நமது சமூகத்தில் பல குடும்பங்களில், தம்பி அல்லது அண்ணனாகப் பிறந்துவிட்டாலே அந்த வீட்டுப் பெண்களைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக ஆண்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். "அக்கா வெளியே போய் யாருடனும் பேசிவிடக் கூடாது, குடும்பக் கௌரவம் கெட்டுவிடக் கூடாது" என்ற போலி கௌரவப் புத்தி தான் தம்பியை ஆயுதம் தூக்க வைத்துள்ளது. அது கடையில் அவரது எதிர்காலத்தையும் சேர்த்தே அழித்துள்ளது. நெல்லையில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்துள்ளன என்பது கசப்பான உண்மை..

அடிக்கடி போனில் பேசினாலே அது தப்பான விஷயமாகத்தான் இருக்கும் என்ற குறுகிய மனப்பான்மை மற்றும் அதீத சந்தேகம் இன்று பலரிடம் பெருகிவிட்டது. அக்கா யாரிடம் பேசுகிறார் என்று நாகரிகமாக விசாரிக்கும் பக்குவம் இல்லாமல், "நான் சொன்னதைக் கேட்க மாட்டியா?" என்ற ஈகோ (Ego) தலைக்கேறும்போது அது கொலையாக மாறி உள்ளது. இன்றைய இளைஞர்களில் பலருக்குத் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரிவதில்லை . ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்படும்போது, அதன் விளைவு என்னவாக இருக்கும், தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்று ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், கையில் கிடைக்கும் ஆயுதத்தை எடுத்து உயிரைப் பறிக்கும் அளவிற்கு வன்முறை எண்ணம் சாதாரணமாகிவிட்டது. அப்படியான சம்பவம் தான் நெல்லையில் நடந்துள்ளது.
நெல்லை அருகே சுத்தமல்லி மேலகரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கண்ணம்மா. இவர்களுக்கு ராமலட்சுமி (வயது 23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) ஆகிய 2 மகன்களும் இருக்கிறாரகள்.
ராமலட்சுமி, நெல்லை அருகே கங்கைகொண்டான் பகுதியில் உள்ள தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். ராகுல், கோவையில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். முத்துகிருஷ்ணன், நாங்குநேரி பகுதியில் உள்ள ஓட்டலில் அக்கவுண்டன்டாக பணியாற்றி வருகிறார்.
முத்துகிருஷ்ணன் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம், அக்காள் ராமலட்சுமியிடம், "அடிக்கடி தனியாக சென்று செல்போனில் நீண்ட நேரமாக பேசக்கூடாது" என்று கூறி கண்டித்து வந்தார். ஆனாலும் ராமலட்சுமி அதனை பொருட்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. சுத்தமல்லி பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவுக்காக முத்துகிருஷ்ணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. நேற்று முன்தினம் இரவு பெற்றோர் வீட்டின் பின்புறம் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் வைக்க சென்றனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமி செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த முத்துகிருஷ்ணன், அக்காள் ராமலட்சுமியைக் கண்டித்தாக சொல்லப்படுகிறது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் ராமலட்சுமி, "நான் செல்போனில் அப்படித்தான் பேசுவேன்" என்று கூறினாராம். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமலட்சுமியை கண்மூடித்தனமாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். மகளின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ராமலட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். நெல்லை அருகே அடிக்கடி செல்போன் பேசியதைக் கண்டித்தும் கேட்காததால் அக்காளை தம்பியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!














Click it and Unblock the Notifications