"என்னதான் சாதிக்க போறீங்க தம்பி".. நெல்லையை உலுக்கிய ஜாதி கடந்த காதல்.. உடைந்து நொறுங்கிய மோகன் ஜி!
திருநெல்வேலி: நெல்லை மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி செய்துள்ள போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 ஆண்டுகளாக காதலில் இருந்த காதல் ஜோடிக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்து பெண் வீட்டார் அடித்து சூறையாடினர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.

அதன்பின் நடந்த விசாரணையில் போலீசார் முன்னிலையில், பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்கக் கோரி பெண்ணின் தாயும் சகோதரரும் வழக்கறிஞரின் காலைப் பிடித்துக் கதறிய காட்சிகள் இணையத்தில் டிரெண்டானது.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் லெனின் சிலை முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பட்டியலின சாதி: இதைத்தான் பெற்றோர்கள் எதிர்த்து உள்ளனர். இருவரும் வேறு வேறு சாதி. திருமணம் செய்த ஆண் பட்டியலின சாதி என்பதால்.. சாதி வெறி பிடித்த பெற்றோர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த புதுமண காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் ஒத்துழைக்காத நிலையில் அவர்களுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தது. இதுபற்றி அறிந்த அந்த மணமகளின் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த காதல் ஜோடிக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்து பெண் வீட்டார் அடித்து சூறையாடினர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.

மோகன் ஜி போஸ்ட்: நெல்லை மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி செய்துள்ள போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையை கடந்த பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும் இது எந்த மாதிரியான வலி என்று.. பெற்றவர்களை இப்படி புரண்டு அழ வைத்து அப்படி என்ன தான் சாதிக்க போறீங்க தம்பி, தங்கைகளே.. அவர்களை சம்மதிக்க வைத்து உங்கள் காதலை கைகூட செய்யுங்கள்.. அதுவே உண்மையான காதல்.., என்று போஸ்ட் செய்துள்ளார்.
போலீஸ் விசாரணை: இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நுழைந்து சூறையாடியது தொடர்பான புகாரில் பெண் வீட்டாரை சேர்ந்த 6 பேரை பெருமாள்புரம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications