எடப்பாடி ஒரு ரூட் எடுக்க.. கூட்டணியில் இணையுமாறு ஓபிஎஸ், தினகரனுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு!
நெல்லை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வரும் சூழலில் நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கி மிகப்பெரிய பிழையை பாஜக செய்திருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். அவர்கள் திட்டத்தை கொண்டு வரும்போது காந்தி பெயரை அவர்கள் வைக்கவே இல்லை. இப்போது மட்டும் காந்தி மீது எப்படி அக்கறை வருகிறது?

டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். என்னை பொறுத்தவரை திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதற்காக யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். கூட்டணிக்கு இன்னும் 90 நாட்கள் இருக்கிறது, அதற்குள் அதிக மாற்றம் நடக்க இருக்கிறது. வந்தவுடன் தெரிவிக்கிறேன். பொங்கலுக்குப் பிறகு கூட்டணியின் நிலை குறித்து உறுதியான தகவல்கள் அறிவிக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொள்வது அவர்களின் உட்கட்சி விவகாரம். இணைவார்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அது உண்மையா? பொய்யா என்பது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது அதிமுக விவகாரம். ஆனால் இருவரும் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
இதுவரை தம்பி நடிகர் விஜய்யை பொறுத்தவரை ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. மீடியாவில் இமேஜை கிரியேட் செய்கிறீர்கள். மிகப்பெரிய தலைவர் எம்ஜிஆர். அவருக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து நடத்துவது இயலாத காரியம். அதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. தூத்துக்குடியில் தவெக கட்சியில் கூட ஒரு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கவில்லை என்று அந்த நபர் பல்வேறு பிரச்சனைகளில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகரித்துவிட்டது. கையில் புத்தகம் ஏந்தி கல்வி நிலையங்களுக்கு செல்லும் வயதில் அரிவாள் தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து கொள்ளும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் கடிதம் எழுதினேன்.
இதன் மூலம் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த போவதில்லை. மாறாக தமிழக மக்களே சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த தயார் நிலையில் உள்ளனர். அதாவது மக்கள் மனதில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான எண்ணத்தை திமுக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி விட்டனர். நிச்சயமாக வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
வரும் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும் 'தமிழகம் தலைநிமிர தமிழன்' பயணத்தில் பங்கேற்க இருக்கிறார். மறுநாள் 5 ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அன்றே டெல்லி திரும்புகிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
-
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications