நாங்க வேற..அவங்க வேற! திமுக - பாஜக கூட்டணி? சிஎம் விஜய் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திமுக வேறு பாஜக வேறு இல்லை எனவும், டெல்லியில் இருக்கும் திமுகவுக்கு பேர்தான் பாஜக, தமிழ்நாட்டில் உள்ள பாஜகவுக்கு பேர் தான் திமுக என விமர்சித்திருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இந்த நிலையில் திமுக பாஜக கூட்டணி இல்லை எனவும், இரு கட்சிகளின் கொள்கையும் வேறு வேறு என பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆரம்பித்து ஆதரித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பிரச்சார மேற்கொண்டார்.

Nainar Nagendran

அப்போது பேசிய அவர் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்து பேசினார். "தூய சக்தி தவெகவுக்கும் தீய சக்தி திமுகவுக்கும் இடையே தான் போட்டி. திமுக வேறு பாஜக வேறு இல்லை. டெல்லியில் இருக்கும் திமுகவுக்கு பேர்தான் பாஜக. தமிழ்நாட்டில் உள்ள பாஜகவுக்கு பேர் தான் திமுக என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை திருமால் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜக கொள்கை வேறு, திமுக கொள்கை வேறு. இரு கட்சிகளின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாது. சமூக வலைதளங்களில் திமுக - பாஜக கூட்டணி என கூறுவதை ஏற்க முடியாது. நாடாளுமன்ற தேர்தல் வரட்டும். அப்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், தமிழகத்தில் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பிரச்சனைகளை அரசு தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறும் மின்வெட்டைக் கண்டித்து தனது தலைமையில் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நெல்லையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+