சீனின்னு எழுதி வைத்து நக்கினால் இனிக்காது! திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றனும்.. இல்ல? பாஜக வார்னிங்
நெல்லை: தமிழகத்தில் தீபம் ஏற்றுவதால் எந்த சலசலப்பும் ஏற்படாது. தமிழகத்தில் தவெகவில் தான் சலசலப்பு நடக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தம் என்று தீர்ப்பு உள்ள நிலையில், இந்தாண்டு அங்கு தீபம் ஏற்றியே தீர வேண்டும்.. இல்லை என்றால் தீபம் அங்கு நிச்சயம் ஏற்றப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது திருவுருவச் சிலைக்கு பாஜகவினருடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," கர்நாடக அரசு மேகதாது விவகாரத்தில் ஒரு செங்கலைக் கூட வைக்க மாட்டேன் என அமைச்சர் சொல்லியதை, முதலமைச்சர் விஜய் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.
நயினார் நாகேந்திரன்
அமைச்சர் நிர்மல் குமாருக்கு அவரது துறையை குறித்து எதுவும் தெரியாது. மின்சாரம் எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்து அவருக்கும் தெரியாத நிலையில் தான் மின்சாரத்துறை இயங்கி வருகிறது. நானும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவன். தமிழகம் முழுவதும் இருந்த மின்சார துறை முதல் நிலை பொறியாளர்களை வைத்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்திற்கான மின்சார தேவை எவ்வளவு ஐந்து ஆண்டுகளுக்கு அளித்து எவ்வளவு தேவை என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மின்தடை
அதன் பின்னர்தான் தொழிற்சாலைகளின் தேவை மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்டவைகள் காரணமாக கூடுதல் மின் உற்பத்திக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி அமைத்த திமுக அரசு அதிமுக காலத்தில் போடப்பட்ட மின் உற்பத்தி ஒப்பந்தங்களை தடுத்து நிறுத்தியது. அதன் காரணமாக ஏற்பட்ட மின்தடைகளால் திமுக ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டது. இப்போதுள்ள நிலையில் மின்தடை ஏற்படுமா? மின்தடையால் இந்த ஆட்சி அப்புறப்படுத்தப்படுமா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.
ஜோசப் விஜய்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி சென்று சோனியா காந்தி அருகிலேயே அமர்ந்திருந்தார். ராகுல் காந்தி முதலமைச்சரை கட்டி அரவணைத்து அழைத்துச் சென்றார். டெல்லி நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் அருகில் இருந்தபோதாவது கர்நாடக முதலமைச்சர் இடம் காவேரி அணை குறித்து பேசி இருக்க வேண்டும். அல்லது தண்ணீர் திறந்து விடவாது கேட்டிருக்க வேண்டும்.
சோனியா காந்தி
அப்போது முதலமைச்சர் தண்ணீர் விடுங்கப்பா இல்லையென்றால் ஆளை விடுங்கப்பா என்றாவது சொல்லி இருக்கலாம். சோனியா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகத்தை 60 ஆயிரம் தீட்டு கொளுத்தி உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொலை செய்யப்பட்டது குறித்தும் அந்த புத்தகத்தில் எழுதப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறக்காமல் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த காலங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்று தண்ணீரை திறந்து விட வழக்கு தொடர்ந்தார்.
தவெக அரசு
ஆனால் இதுவரை இந்த தவெக அரசு எதுவும் செய்யவில்லை. அமைச்சர்கள் முதல்வர் உள்ளிட்டோர் பேச்சில் தான் அனைத்தும் காட்டுகிறார்கள். செயலில் எதையும் காட்டவில்லை. தஞ்சை பகுதியில் பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டது விவசாயிகள் திவால் ஆகி சொத்தை விற்று தற்கொலை செய்யக்கூடிய நிலையில் தான் உள்ளனர்.
ஜி.ஆர்.சுவாமிநாதன்
நீதி அரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏன் அது போன்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டி இருந்தது என்பதை பார்க்க வேண்டும். எம்பி வெங்கடேசன் பெரிய காரில் வருகிறார் என்பதை சொல்லி உள்ளார். அதைக் கூட நீதிபதி சொல்லக்கூடாது என்பதற்காக எதுவும் உள்ளதா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை அமைச்சர்களை கற்பழிப்பு புகாரில் சிக்கி உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை காட்சி தான் நடக்கிறது.
கார்த்திகை தீபம்
தமிழகத்தில் தீபம் ஏற்றுவதால் எந்த சலசலப்பும் ஏற்படாது தமிழகத்தில் தவெகவில் தான் சலசலப்பு நடக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தம் என்று தீர்ப்பு உள்ளது பிரத்யூ கவுன்சில் இருப்பினும் பல உத்தரவுகள் மலை முருகப்பெருமானுக்கு சொந்தம் என்று தான் உள்ளது 96 தீர்ப்பிலும் அதே தீர்ப்பு தான் உள்ளது. தீபம் ஏற்றுவதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது மாலிக் கபூர் படையெடுப்பு நடந்தபோது 48 ஆண்டுகள் மீனாட்சி அம்மன் கோவில் பூஜை இல்லாமல் இருந்தது.
திருப்பரங்குன்றம் மலை
தீபம் ஏற்றியே தீர வேண்டும். இல்லை என்றால் தீபம் அங்கு நிச்சயம் ஏற்றப்படும். திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றினால் சலசலப்பு ஏற்பட்டு விடும் என தமிழக அரசு சொல்கிறது சலசலப்பு இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதற்குத்தான் காவல்துறை தமிழக அரசு கையில் உள்ளது. தமிழக அரசுதான் அதை செய்ய வேண்டும். சீனி என்று சொல்லிவிட்டு பேப்பரில் எழுதி வாயில் வைத்து நக்கினால் இனிப்பாக இருக்காது." என்றார்.


Click it and Unblock the Notifications
