நீட் தேர்வு மசோதா.. ஆணவமாக ஆளுநர் பேசுவது நியாயமா?.. மக்கள் பதில் சொல்வார்கள்.. அப்பாவு கேள்வி
திருநெல்வேலி: பெற்றோர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்போது, அதன் நன்மை, தீமைகளை ஆளுநர் ஆய்வு செய்து விளக்கி கூறலாம். மாறாக ஆணவத்தில் நான் கையெழுத்திட மாட்டேன் என்று கூறுவது தேவையில்லாதது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதை அவர் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், நீட் இளநிலைத் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் சுமார் 100 பேரை அழைத்து அவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாடினார். இந்தக் கூட்டத்தில் பெற்றோர் தரப்பில் சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் என்பவர் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சார்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
எனவே நீட் தேர்வில் இருந்து எப்போது விலக்கு கொடுப்பீர்கள் என ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்பினார். இதனால் ஆளுநர் அதிர்ச்சியடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக அம்மாசியப்பனை நோக்கி உட்காருங்கள் என மிரட்டி அவரிடம் இருந்த மைக்கை பறித்தனர்.
பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்று கூறவே அங்கிருந்த பெற்றோர்கள் ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் விவாதப்பொருளாக மாறிய நிலையில் இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துள்ளார். குரோம்பேட்டையில் வசித்த வந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் மருத்துவம் படிக்கும் நோக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் மரணமடைந்த துக்கத்தில் இருந்த தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரட்டை தற்கொலை தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயர் அப்பாவு, நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அந்த நம்பிக்கையில்தான் ஆட்சி மாற்றமே நீட் தேர்வுக்கு விடிவு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
நாடு முழுவதுமே ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அது நிறைவேறும். பெற்றோர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்போது, அதன் நன்மை, தீமைகளை கவர்னர் ஆய்வு செய்து விளக்கி கூறலாம். மாறாக ஆணவத்தில் நான் கையெழுத்திட மாட்டேன் என்று கூறுவது தேவையில்லாதது. தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.
தன்னால் என்ன செய்ய முடியும்? என்பதைக்கூட ஆளுநர் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு பாஜக உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற அனைவருமே ஆதரித்து பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி தலைவரும் நீட் தேர்வு தேவையில்லை என்று ஆதரித்து பேசினார். தற்போது ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட மாட்டேன் என்று ஆணவமாக கூறுவது நியாயமா? என்று எனக்கு தெரியவில்லை. மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications