கூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க சென்றிருந்த கருப்பசாமி பாண்டியன் கூட்ட நெரிசலில் தடுமாறியதை பார்த்த ஓ.பி.எஸ்.அவரை தாங்கிப்பிடித்ததுடன் பத்திரமாக அழைத்துச் செல்லுமாறு தனது பாதுகாவலர்களிடம் கூறினார்.

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் படத்திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் ஓ.பி.எஸ். நெல்லை சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு மாவட்ட எல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில், எம்.ஜி.ஆர்.காலத்து மிக மூத்த நிர்வாகி கருப்பசாமி பாண்டியன், அமைச்சர் ராஜலட்சுமி, விஜிலா சத்யானந்த் எம்.பி.ஆகியோர் கலந்துகொண்டனர்.

தடபுடல் வரவேற்பு

தடபுடல் வரவேற்பு

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் படத்திறப்பு விழா மற்றும் இரங்கல் கூட்டம் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லையில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் ஓ.பி.எஸ்.சை வரவேற்க வந்திருந்தனர்.

தள்ளுமுள்ளு

தள்ளுமுள்ளு

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு மாலைகளையும், சால்வைகளையும் அணிவிக்க ஏராளமானோர் திரண்டிருந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் மிக மூத்த நிர்வாகியான கருப்பசாமி பாண்டியன் சிக்கிக்கொண்டார். இதனைப்பார்த்த ஓ.பி.எஸ். தனது பாதுகாவலரை அழைத்து அண்ணாச்சியை பத்திரமாக கூட்டத்தில் இருந்து வெளியே கொண்டு போய் விடுங்க என உத்தரவிட்டார். மேலும், கூட்டநெரிசலில் சிக்கி தடுமாறிய கருப்பசாமி பாண்டியனை கைதாங்கலாக அழைத்தார் ஓ.பி.எஸ்.

25-வயது

25-வயது

நெல்லை மாவட்டத்தில் மிக மூத்த அரசியல்வாதி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கருப்பசாமி பாண்டியன். இவரை கானா அண்ணாச்சி என்றே அந்த மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் அழைக்கின்றனர். 25 வயதில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியில் எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். அதன் பிறகு எம்.ஜி.ஆரின். செல்லப்பிள்ளையாக வலம் வந்த இவர் இடையே திமுகவுக்கு சென்று இப்போது மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

முன்கோபம்

முன்கோபம்

எம்.ஜி.ஆருடன் வலம் வந்தவர் இன்று ஓ.பி.எஸ்.சை வரவேற்க வரிசையில் நிற்பதை தங்களால் பார்க்க முடியவில்லை என்றும், முன் கோபம் தான் அவருக்கு உள்ள ஒரே எதிரி என்றும், அதுமட்டும் இல்லையென்றால் அண்ணாச்சி இன்று இருக்கும் இடமே வேறு மாதிரி இருந்திருக்கும் என பெருமூச்சு விடுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+