Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டென்சனில் நேரு.. பூதாகரமான உட்கட்சி பூசல்! நெல்லை மேயரையே மாத்தனும் - திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி

நெல்லை கவுன்சிலர் திருச்சி சென்ற சமயத்தில் நேரு ஆதரவாளர்கள் மற்றும் திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கு இடையே வெடித்த மோதல் காரணமாக அவர் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் வெடித்து இருக்கும் நிலையில் அவரை மாற்ற வலியுறுத்தி திமுக கவுன்சிலர்கள் 30 க்கும் அதிகமானோர் திருச்சி மற்றும் சென்னைக்கு படையெடுத்து கிளம்பி இருப்பது அக்கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 55 வார்டுகளை கொண்ட திருநெல்வேலி மாநகராட்சியில் 42 வார்டுகளில் திமுக வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியாக திமுகவை சேர்ந்த சரவணன் மேயராக தேர்வானார்.

திமுகவின் கே.ஆர்.ராஜூ துணை மேயராக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவை சேர்ந்தவர்களே 4 மண்டலங்களின் தலைவர்களாகவும் திமுகவை சேர்ந்தவர்களே பதவி வகித்து வருகிறார்கள்.

மேயருக்கு எதிரான போர்க்கொடி

மேயருக்கு எதிரான போர்க்கொடி

இந்த நிலையில் திருநெல்வேலி திமுகவிற்குள் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். மாநகராட்சிக்கு உட்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் கவுன்சிலர்களோடு மேயர் சரவணன் இணைந்து செயல்படாமல் தன்னிச்சையாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

முறைகேடு புகார்

முறைகேடு புகார்

குறிப்பாக பல்வேறு பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாக திமுகவினர் மாநகராட்சி கூட்டங்களில் தெரிவித்து உள்ளார்கள். ஆனால், இதுகுறித்து திருநெல்வேலி மேயர் சரவணன் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்து இருக்கும் திமுக கவுன்சிலர்கள் சரவணனை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.

புகாரளிக்க புறப்பட்ட கவுன்சிலர்கள்

புகாரளிக்க புறப்பட்ட கவுன்சிலர்கள்

இது தொடர்பாக நகராட்சித்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை விடுக்க திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜூ தலைமையில், 4 மண்டலங்களின் தலைவர்கள், 30 க்கும் அதிகமான திமுக கவுன்சிலர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னைக்கு ஒன்றாக சென்று இருக்கிறார்கள்.

நேரு VS திருச்சி சிவா

நேரு VS திருச்சி சிவா

ஆனால், அமைச்சர் கே.என்.நேருவோ திருச்சிக்கு சென்றுவிட்டதால், புதன்கிழமை திருச்சிக்கு சென்ற திருநெல்வேலி துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள், மேயர் சரவணனை மாற்றுமாறு கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால், அந்த சமயத்தில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கு இடையே வெடித்த மோதல் காரணமாக அவர் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது.

அறிவாலயத்தில் புகார்

அறிவாலயத்தில் புகார்

எனவே அவர்களிடம் ஊருக்கு செல்லுமாறும், விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் பேசி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கவுன்சிலர் அனைவரும் திருநெல்வேலிக்கே திரும்பி சென்ற நிலையில், நெல்லை துணை மேயர் ராஜூ மற்றும் 4 மண்டலங்களின் தலைவர்கள், கட்சியின் துணை செயலாளர்கள் தர்மர், சுரேஷ் உள்ளிட்ட 7 பேர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று இருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அங்கு திமுக மூத்த நிர்வாகிகளை நெல்லை மாநகர துணை மேயர், மண்டல தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சந்தித்து மேயர் சரவணனை மாற்றுமாறு கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அப்போது கட்சித் தலைமை மேயரை நேரில் அழைத்து இரு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. நேற்று திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல் வெடித்த நிலையில், நெல்லை திமுகவிலும் இது பூதாகரம் எடுத்துள்ளதால் அறிவாலய வட்டாரம் டென்சனில் இருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+