ஷாக்..கையில கட்டு.. வாயில துணி..! ஒரே பேட்டர்ன்.. ராமஜெயம் கொலை - ஜெயக்குமார் கொலையில் ஒரே கும்பல்?
நெல்லை: கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் கொலையும், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் கேஎன் நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பேட்டர்னும் ஒரே மாதிரியாக இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகிக்கின்றனர்.
கடந்த மே இரண்டாம் தேதி தனது தந்தையை காணவில்லை என நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நான்காம் தேதி அவரது சொந்த ஊரில் அவரது தோட்டத்தில் வீட்டிற்கு பின்புறம் பாதி உடல் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் உலாவின. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டி ஜெயக்குமார் கடிதம் எழுதியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நெல்லை ஜெயக்குமார்: இது தொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமாரின் கை கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்டதோடு வயிற்றில் கடப்பாக்கல் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. இதனால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஜெயக்குமாரின் மரணம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அரசியல் ரீதியான கொலையா அல்லது தொழில் ரீதியாக ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.
தீவிர விசாரணை: ஜெயக்குமார் இறந்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை எந்த தடயமும் கிடைக்காத நிலையில் கோவை மதுரையில் இருந்து கூடுதலாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவரது தோட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. தோட்டத்திற்குள் புதிதாக யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ஜெயக்குமாரின் உடல் தீ எரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதியை சுற்றியுள்ள பெட்ரோல் பங்குகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபர்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர்
இரு கொலைக்கும் தொடர்பு?: இந்த நிலையில் ஜெயக்குமாரின் மரண வழக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கும் ஒரே மாதிரியான வடிவத்தை கொண்டிருப்பதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகம் அடைந்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அப்போது அவரது வாயில் துணி வைத்ததைப் போன்று ஜெயக்குமாரின் வாயில் கம்பி பிரஸ் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கிறது.
ஒரே பேட்டர்ன்: ராமஜெயத்தை போலவே ஜெயக்குமாரின் கை கால்களை கட்டி கொலை செய்திருக்கின்றனர். ராமஜெயத்தின் உடலை எரிக்க முயன்ற நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பல்வேறு வகைகளில் இரு கொலைகளுக்கும் ஒற்றுமை இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகிக்கின்றனர். மேலும் ராமஜெயத்தை கொலை செய்த கொலையாளிகளே இந்த கொலையையும் அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ராமஜெயம்: திருச்சி மாவட்ட திமுக முக்கிய பிரமுகரும், கழக தலைமை நிலைய செயலரும் , தற்போதைய நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியான தொழிலதிபர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
சோதனை: இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பிரபல ரவுடிகள் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து , சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், மயிலாடுதுறை கலைவாணன் என 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் அதிலும் எவ்வித முன்னேற்றமும் கிடைக்காத நிலையில் தான், தற்போது ஜெயக்குமார் கொலை வழக்கும் அதே பாணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications