முதல்ல சாலமன்.. அடுத்து மனோ.. 21 வயசு பெண்.. நெல்லையை அதிர வைத்த காமுகன்கள்!

நெல்லையில் இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த கும்பல் கைதானார்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: 21 வயசு பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர் 3 காமுகர்கள்.. இதையடுத்து, இந்த வீடியோவை வைத்தே அடுத்தடுத்த திருவிளையாடல்களில் இறங்கிவிட்டனர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சாலமன்.. இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.. 21 வயதான அந்த பெண், இவருடைய ஏரியாவை சேர்ந்தவர்தான்.

அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து கொண்டனர்.. ஜாலியாகவும் இருந்துள்ளனர்.. அந்த சமயத்தில், காதலியை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார் சாலமன்.

பணம்

பணம்

அந்த பெண் சற்று வசதியானவர் என்று தெரிகிறது.. ஒருநாள் சாலமன், காதலியிடம் கேட்டுள்ளார்.. கல்யாணம் செய்து கொள்ள போவதால், பெண்ணும், பணத்தை தந்துள்ளார்.. ஆனால், சாலமன் அடிக்கடி பணம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.. கொஞ்ச நாள் கழித்து, அந்த ஆபாச வீடியோவை காட்டி, பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. அந்த வீடியோவை பார்த்ததுமே பெண் பதறி விட்டார்.

கல்யாணம்

கல்யாணம்

வேறு வழியில்லாத நிலையில், முடிந்தவரை பணத்தை புரட்டி கொண்டு வந்து தந்துள்ளார்.. மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்ட பெற்றோர், சில மாதங்களுக்கு முன்பு, வேறு ஒரு இளைஞரை பார்த்து உடனடியாக கல்யாணமும் செய்து வைத்தனர்.. இது சாலமனுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் தந்தது.. அதனால் தினமும் பெண்ணுக்கு போன் செய்து தொந்தரவு தர ஆரம்பித்தார்.. பணம் கேட்டு தொல்லை படுத்தினார்.. தன்னுடைய நண்பர்களிடமும் ஜாலியாக இருக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டார்.

 செல்போன்

செல்போன்

ஒருகட்டத்தில் வீட்டிற்கே சென்றுவிட்டார்.. அப்போது பெண்ணின் கணவர் வீட்டில் இல்லை.. அதனால், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து கொண்டார் சாலமன்.. பிறகு பீரோவை திறந்து பணத்தையும் எடுத்து கொண்டு தப்பிவிட்டார்.. அதுமட்டுமல்ல, அப்பெண்ணின் வீடியோவை அவரது கணவரின் செல்ஃபோனுக்கும் அனுப்பி வைத்துவிட்டார் ஜான்சன்.. அந்த வீடியோவை பார்த்த கணவர், தன் மனைவியை எதையும் விசாரிக்காமல் அவரது பெற்றோர் வீட்டில் கொண்டுவந்து விட்டுப் போய்விட்டனர்.

 வலைவீச்சு

வலைவீச்சு

உடனடியாக புகாரை விசாரிக்குமாறு அவர் உத்தரவிடவும், அதிரடியில் இறங்கினர் போலீசார் சாலமன் அவரது நண்பர்கள் மனோசேட், ஜான்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால் முக்கிய குற்றவாளியான சாலமனை காணவில்லை.. இதில் ஜான்சன் என்பவர் ஏற்கனவே அதேபகுதியை சேர்ந்த 2 இளம் பெண்களை ஏமாற்றி இதுமாதிரியே வீடியோ எடுத்து பணம் பறித்தவராம்.. இந்த 3 பேருமே கஞ்சா பேர்வழிகளாம்.. இது சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சாலமனையும் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+