பாளையங்கோட்டையில் தீராத மக்களின் துயரம்! இப்படி ஒருத்தர் போனால், அப்படி ஒருத்தர் நிற்கனும்!
திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப் பாதை அமைக்கும் வரை ரயில்வே கேட்டின் அமைப்பை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்து செல்லும் வகையில் மாற்ற வேண்டும் எனவும், மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஆட்டோ வந்து செல்லுமாறு அமைத்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட், அப்பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து பாதையாக உள்ளது. இந்த ரயில்வே கேட் தினசரி சுமார் 13 முறை திறந்து மூடப்படுவதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வந்தனர்.

இந்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தில், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாலம் கட்டும் பணி துவங்கியது. எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்தப் பணி, 2023 ஆம் ஆண்டில் மீண்டும் துவங்கி, மும்முரமாக நடைபெற்று, ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது.
மேம்பாலம் கட்டப்பட்ட பின்னர், ரயில்வே கேட் மூடப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனர். 2024 ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கேட் மூடப்பட்டது. இதனால், ரயில்வே தண்டவாளத்தின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்படும் வரை, கேட்டை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதனை அடுத்து ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட்டின் இரண்டு புறமும் ஒரு இருசக்கர வாகனம் மட்டுமே சென்று வரும் வகையில் தடுப்பு ஒன்றினை அமைத்தது. ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படாததால் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழித்தடத்தினால் மீண்டும் மேம்பாலத்தை பொதுமக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். அண்மையில் உள்ள பகுதிகளுக்கு செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் வரும்போது இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

ரயில்வே கேட்டு திறந்து மூடப்படும் போது இரண்டு புறமும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு ரயில்வே கேட்டு திறந்தவுடன் ஒருவர் ஒருவரை முந்திக்கொண்டு செல்ல முயற்சிப்பதாலும் தினமும் கடுமையான பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட்டு திறந்து மூடப்படும் போது இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அதிக நேரம் ரயில்வே கேட்டில் இருபுறமும் காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
பாளையங்கோட்டையில் தீராத மக்களின் துயரம்!
— Veerakumar (@Veeru_Journo) March 21, 2025
நெல்லை, பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்கும் வரை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்து செல்லும் வகையில் இந்த ரயில்வே கேட்டின் அமைப்பை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை#Nellai @thatsTamil pic.twitter.com/EZ3q2q9YXO
இதனை கருத்தில் கொண்டு சுரங்கப்பாதை அமைக்கும் வரை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்து செல்லும் வகையில் இந்த ரயில்வே கேட்டின் அமைப்பை மாற்ற வேண்டும் எனவும், மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஆட்டோ வந்து செல்லுமாறு அமைத்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்தடுத்து ரயில்கள் வருவதை பொறுத்து ரயில்வே கேட் மூடப்படும் போது ரயில்வே கேட்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் கடக்க முடியாமல் பலதரப்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளும் ரயில்வே கேட்டின் அருகிலேயே மாட்டிக் கொள்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக தொடர்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications