நெய் திருடிய ரவுடி.. கடையை தாக்கி அட்டகாசம்.. கைது செய்த போலீஸ்.. பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம்
நெல்லை சரவணா ஸ்டோரில் அட்டகாசம் செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்
Recommended Video
நெல்லை: ஒரு ரவுடி.. போயும் போயும் ஒரு நெய் பாட்டிலை திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.. விஷயம் வெளியே தெரிந்ததும், அரிவாளை கொண்டு பொதுமக்களை வெட்ட முயன்றபோது, போலீசாரிடம் சிக்கி.. விசாரணையின்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையையும் உடைத்து கொண்டுள்ளார்!
தமிழகத்தின் முக்கிய இடங்களில் சரவணா ஸ்டோர் கடைகள் உள்ளன. அதில் நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையும் ஒன்று.
ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கடை இது. அதனால் எப்பவுமே கூட்டநெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் சில ரவுடிகள் இங்கு திடீரென அரிவாளுடன் புகுந்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்துவிட்டனர். இதனால் அங்கிருந்த கடை ஊழியர்கள், பொதுமக்கள் சிதறி ஓடினார்கள். பின்னர் அந்த ரவுடிகள் தாங்கள் வந்த காரில் ஏறி பறக்க முயன்றனர்.

ஆத்திரம்
ஆனால் பொதுமக்களில் சிலர் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். தங்களை மக்கள் துரத்துவதை பார்த்த ரவுடிகள் ஆத்திரம் அதிகமாகி நடுரோட்டிலேயே காரை நிறுத்திவிட்டனர். பிறகு அதே அரிவாள்களை எடுத்து கொண்டு வந்து விரட்டியவர்களை வெட்ட முயன்றனர். நடுரோட்டிலேயே இப்படி அரிவாளும் கையுமாக ரவுகடிள் விரட்டுவது பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனால் அந்த இடமே பரபரப்பானது.

பரபரப்பு
விஷயம் போலீசுக்கு போனதும், விரைந்து வந்த அவர்கள் சம்பந்தப்பட்ட ரவுடிகள் யார் என்ற விசாரணை மேற்கொண்டனர். இந்த கும்பலுக்கே முக்கிய புள்ளியான ரவுடி முருகானந்தத்தை கைது செய்தனர்.
பிறகுதான் இவ்வளவு அமர்க்களம், அட்டகாசத்துக்கு காரணம் என்று விசாரிக்கப்பட்டது.

நெய்
சில நாட்களுக்கு முன்னாடி நெய் பாட்டில் ஒன்றை சரவணா ஸ்டோரில் முருகானந்தம் திருடி உள்ளார். திருடிக் கொண்டு எஸ். ஆகும்போது, அங்கிருந்த செக்யூரிட்டிகள் கையும் களவுமாக பிடித்து போலீசிலும் ஒப்படைத்துவிட்டனர். இந்த ஆத்திரத்தால்தான் கடையில் உள்ளவர்களை போட்டு தள்ள வந்ததாக கூறினார்.

வழுக்கி விழுந்தார்
தொடர்ந்து போலீசார் முருகானந்தத்திடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை.. முருகானந்தம் கையில் கட்டு போடப்பட்டுள்ளது. பாத்ரூம் போகும்போது வழுக்கி விழுந்துட்டாராம். எந்த கையில் அரிவாளுடன் நடுரோட்டில் ஓட ஓட மிரட்டி பொதுமக்களை ஓடவிட்டாரோ, அதே கையில் முருகானந்தத்துக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
