ஆழ்ந்த உறக்கத்தில் சிங்கப்பெண் படை! 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. அதுவும் பொது இடத்தில்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் அவர் தோல்வியடைந்ததால், வீட்டில் இருந்த பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, பெற்றோரிடம் தகராறு செய்துவிட்டு அக்டோபர் 15 அன்று வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியேறினார்.

மகள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர், உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், உடனடியாக திருநெல்வேலி தாலையூத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

Tirunelveli Tiruchendur

ரயிலில் அழைத்துச் சென்று நட்டாற்றில் விட்ட நண்பர்கள்

வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, தனது ஆண் நண்பர் மற்றும் மற்றொரு நண்பரான இரண்டு சிறுவர்களுடன் திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஏறியுள்ளார். பயணத்தின் போது, அந்த இரண்டு சிறுவர்களும் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த விவகாரமும், போலீசார் தங்களைத் தேடி வருவதையும் அச்சிறுவர்கள் தங்களின் பெற்றோர் மூலம் தெரிந்து கொண்டனர். இதனால் பயந்துபோன சிறுவர்கள், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் மாணவியின் கையில் சிறிதளவு பணத்தைக் கொடுத்துவிட்டு, அவரை அங்கேயே அனாதையாக விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

உதவி செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற கும்பல்

செய்வதறியாது திருச்செந்தூர் பகுதியில் திகைத்து நின்ற மாணவியை, மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (வயது 26), மணி (வயது 28) மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று பேர் கொண்ட கும்பல் கவனித்தது. அவர்கள் மாணவியிடம் சென்று உதவி செய்வது போல் நடித்துள்ளனர். அந்த நேரத்தில் குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது.

அந்தத் திருவிழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்காகவே இந்த மூன்று பேரும் அங்கு சென்றிருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மாணவியை நைசாகப் பேசி குலசேகரப்பட்டினத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்றனர்.

குலசேகரப்பட்டினத்தில் நடந்த முதல் கொடுமை

குலசேகரப்பட்டினம் சென்ற இடத்தில், கூட்ட நெரிசலுக்கு நடுவே மாணவியை மணி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன்பின்னர், மணியும் சண்முகசுந்தரமும் அங்கிருந்து தப்பித்து ஊருக்குத் திரும்பிவிட்டனர்.

அப்போது கார்த்திக் மட்டும் அந்த மாணவியுடன் இருந்தார். ஏற்கனவே விவாகரத்து பெற்றவரான 26 வயது கார்த்திக், மாணவியிடம் "உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன், என்னுடன் வந்துவிடு" என்று ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றினார்.

வாடிப்பட்டியில் மீண்டும் வன்கொடுமை; தப்பிய மாணவி

கார்த்திக்கின் பேச்சை நம்பிய சிறுமி, அவருடன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அக்டோபர் 16 அன்று சென்றார். அங்கும் கார்த்திக் அந்த மாணவியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

தொடர்ந்து நடந்த கொடுமைகளால் அதிர்ச்சியடைந்த மாணவி, எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்தார். அங்குள்ள அக்கம்பக்கத்து ஊர் மக்களின் உதவியோடு வீட்டை விட்டுத் தப்பியோடி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை அடைந்தார்.

சிசிடிவி மற்றும் முக அடையாளம் மூலம் போலீஸ் அதிரடி மீட்பு

இதற்கிடையில், காணாமல் போன மாணவியைத் தேட திருநெல்வேலி போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கார்த்திக்கின் செல்போன் டவர் இருப்பிடம் மற்றும் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், வாடிப்பட்டி பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் நவீன முக அடையாளக் காட்டும் தொழில்நுட்பத்தைப் (Facial Recognition) பயன்படுத்தி தேடுதலைத் தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் மாணவி வாடிப்பட்டி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து உள்ளூர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அக்டோபர் 17 அன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளும் பாதுகாப்பு சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

போக்சோ சட்டம் பாய்ந்தது: 2 பேர் சிறையில் அடைப்பு

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாணவியை வன்கொடுமை செய்த மணி மற்றும் உடந்தையாக இருந்த சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நிலுவையில் இருந்த வேறு ஒரு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், கார்த்திக்கை திண்டுக்கல் போலீசார் முறைப்படி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், மாணவியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அனாதையாக விட்டுச் சென்ற இரண்டு சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இளஞ்சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+