திருநெல்வேலி 2026: ஷ்யாம் கிருஷ்ணசாமியா? நயினார் பாலாஜியா? வாரிசு போரில் நெல்லையில் ஜெயிப்பது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், சூப்பராக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.. , சமூகக் கூட்டமைப்பு மற்றும் அரசியல் மாற்றங்களின் களமாகத் திகழும் இத்தொகுதியில், வரப்போகும் தேர்தலில் யார் வெல்லப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் எதிர்பார்ப்பாக உள்ளது.. அதுவும் மும்முனையாக நெல்லை மாறியிருப்பதாக சொல்கிறார்கள்.. அங்கு என்னதான் நடக்கிறது? கள நிலவரம் என்ன?

தொகுதி அரசியல் மற்றும் சமூகக் கூட்டமைப்பின் களமாக விளங்குகிறது திருநெல்வேலி தொகுதி.. பிள்ளைமார், யாதவர், தேவர் மற்றும் இஸ்லாமிய சமூகங்கள் முக்கிய வாக்குகளை தரும் இத்தொகுதியில், தேவேந்திரகுல வேளாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்..

Shyam Krishnasamy

திருநெல்வேலி கோட்டை

சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸின் கோட்டையாக இருந்த நெல்லை, 1967-ல் திராவிட முன்னேற்ற கழகத்தின் எழுச்சிக்கு பிறகு திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெறும் தொகுதியாக மாறியது.. கடந்த 2021 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்று, இத்தொகுதியை பாஜகவின் முக்கிய அடையாளமாக மாற்றினார்..

ஆனால் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவின் நிலையைத் தக்கவைக்க, அதிமுகவும் புதிய தமிழகம் கட்சியும் கடும் போட்டியை காண போகிறார்கள் என்பதுதான் ஹாட் டாப்பிக்...!!

நெல்லை நயினார்

தற்போதைய எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் மீது ஆதரவு இருந்தாலும், பொதுமக்களில் சில அதிருப்திகள் இருக்கத்தான் செய்கின்றன.. இதனால் நயினார் நாகேந்திரன், நாங்குநேரி அல்லது சாத்தூர் தொகுதிகளுக்கு மாறக்கூடும் என்ற யூகங்களும் கிளம்பியுள்ளன..

இருந்தாலும் நெல்லையை இழக்க விரும்பாத நயினார் நாகேந்திரன், தனது மகனையோ அல்லது விசுவாசமான மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜனையோ களமிறக்க திட்டமிடலாம் என்கிறார்கள்..

அதிமுக பாளையங்கோட்டை

அதிமுகவில் அதற்குமேல் சுறுசுறுப்பாக உள்ளனர்.. இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க தச்சை கணேச ராஜா, கல்லூர் வேலாயுதம், பால்கண்ணன் போன்ற பல நிர்வாகிகள் களமிறங்கியுள்ளனர்.. அவர்களில் சிலர் பாளையங்கோட்டை தொகுதிக்கும் ஆர்வம் காட்டுவதால் உட்கட்சிப் போட்டி தீவிரமாகியுள்ளது..

மற்றொரு பக்கம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறத் துடிக்கும் புதிய தமிழகம் கட்சி, மானூர் வட்டார சமூக வாக்குகளை நம்பி, நெல்லை தொகுதியில் தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளது. இந்த கட்சியின் இளைஞரணித் தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி இங்கு களம் காண வாய்ப்புள்ளது என கூறப்படுவது, தொகுதியின் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது..

ஷ்யாம் கிருஷ்ணசாமி

நெல்லை தொகுதியில் வேட்பாளர் தேர்வு சாதிய சமன்பாடுகளையும், தனிப்பட்ட செல்வாக்கையும் பொறுத்ததாக அமையும்.. நயினார் நாகேந்திரன் தொகுதி மாறினால், பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உண்டு, காரணம் 2021 வெற்றி பெரும்பாலும் அவரது தனிப்பட்ட செல்வாக்கினால் மட்டுமே வந்தது என்பதை இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டும்..

அதிமுக, அதிகப்படியான வேட்பாளர் பட்டியல் குழப்பத்தை தவிர்த்து, உள்ளூர் செல்வாக்கு மிக்க ஒருவரை நிறுத்த வேண்டும்.. புதிய தமிழகம் கட்சி போட்டியினால், அது தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளை பிரித்து, மும்முனைப் போட்டியை உருவாக்கி முடிவை மாற்றும் வல்லமை கொண்டது..

ஆக மொத்தத்தில், திருநெல்வேலி 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது சமூகச் சமநிலை, கட்சி நிலை, வேட்பாளர் செல்வாக்கு போன்ற பல காரணிகள் ஒன்றாக இணைந்து வெற்றியை நிர்ணயிக்கும் மிகச் சுவாரசியமான அரசியல் களமாக தற்போது மாறியுள்ளது.. ஆனால் உண்மை நிலவரம் போக போகத்தான் தெரியும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+