குவிந்த மக்கள்.. தாமிரபரணி நதிக்கரையில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தகனம்
நெல்லை: நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியிலுள்ள தாமிரபரணி நதிக்கரையில் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல், தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, நூற்றுக்கணக்கானோர் கூடி, அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
Recommended Video

தமிழகத்தின் கடைசி முடிசூடிய மன்னரான நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஜமீன்ந்தார் முருகதாஸ் தீர்த்தபதி (89) உடல்நலக் குறைவால், நேற்று காலமானார்.
இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரண்மனையில் தொடங்கிய சிங்கபட்டி ஊரின் முக்கியமான வீதிகளின் வழியாக பயணித்து, தாமிரபரணி நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜ முறைப்படி இறுதிச் சடங்கு நடைபெற்று, உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் திமுக சார்பில் முன்னாள் சட்ட சபை சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திரளான பொதுமக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். சிங்கம்பட்டி ஜமீனுக்கு உட்பட்ட அனைத்து கிராமத்தில் உள்ள மக்களும் திரளாக பங்கேற்றனர்.
இந்த இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் முக கவசம் அணிந்து இருந்தனர், ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாததை பார்க்க முடிந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications