"ரூ.1000 கோடி வருமானம் வருது சரி.. அப்போ மீதி ரூ.220 கோடி வரி எங்கே விஜய்?" சபாநாயகர் அப்பாவு கேள்வி
நெல்லை: விஜய் அரசியல் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இதற்கிடையே விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அப்பாவு, ஆனால் விஜய் கட்சிக்கும் பாஜகவுக்கும் மறைமுக தொடர்பு இருப்பதாகச் சாடினார். மேலும், ரூ.1000 கோடி வருவாய் இருப்பவர் ஏன் ரூ.80 கோடியை மட்டுமே வரியாகக் கட்ட வேண்டும் என்றும் விஜய்யை மறைமுகமாகச் சாடினார்.
நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார்.

நடிகர் விஜய்
குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார். மேலும், 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இதற்கிடையே விஜய் அரசியலை விமர்சித்து சபாநாயகர் அப்பாவு சில கருத்துகளைக் கூறியுள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கும் அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக அப்பாவு குற்றஞ்சாட்டினார்.
சபாநாயகர் அப்பாவு
இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "நம்ம தம்பி விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் கட்சி ஆரம்பித்ததில் எந்தவொரு தவறும இல்லை. அதை வரவேற்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய கட்சியை ஆரம்பித்துள்ளார். ஆனால், அவரது கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கிறாரே புஸ்ஸி ஆனந்த். அவருக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கும் தொடர்பு தெரியுமா.. இருவருக்கும் இடையே எத்தனை ஆண்டு பழக்கம் இருக்கிறது என்பது தெரியுமா..
மறைமுக திட்டம் இருக்கு
அப்படிப்பட்ட நபரைப் பொதுச்செயலாளராக வைத்திருக்கும் கட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்களே சொல்லுங்கள்.. ஏற்கனவே வருங்கால முதல்வர் என்று புஸ்ஸி ஆனந்திற்கு போஸ்டர் அடித்துள்ளனர். இதுதான் பாஜகவின் மறைமுக திட்டம். விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் தான் அடுத்த முதல்வர் என்றால் என்ன செய்ய முடியும்.
வரி எங்கே?
கேட்டால் 1000 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக அவர்களே சொல்கிறார்கள். ரூ.1000 கோடிக்கு வெறும் ரூ.80 கோடி தானே வருமான வரி கட்டி இருக்கிறீர்கள். அப்போ மீதி ரூ.220 கோடி வருமான வரி கட்ட வேண்டும் தானே.. மத்திய வருமான வரித்துறை இதில் நடவடிக்கை எடுக்குமா.. அப்படி எடுத்தால் தான் விஜய் தானாகக் கட்சி ஆரம்பித்துள்ளார்.. பாஜக சொல்லி கட்சியை ஆரம்பிக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள்.
அப்படி எடுத்தால் தான் விஜய் தானாகக் கட்சி ஆரம்பித்துள்ளார்.. பாஜக சொல்லி கட்சியை ஆரம்பிக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். அப்படி பாஜக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்.. பாஜக சொல்லியே இவர் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர்களிடம் வேறு ஒரு திட்டமும் இருப்பதாகவே தெரிகிறது" என்று அவர் பேசினார். தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் ஆர்ஜுனா விஜய் சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதாக பேசியிருந்த நிலையில், அதை குறிப்பிட்டே அப்பாவு இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
-
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
120 வாக்குறுதிகள்.. லிஸ்ட் போட்ட டிடிவி தினகரன்.. விட்டதை பிடிக்க அமமுக ஸ்கெட்ச் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் சற்றுநேரத்தில் வெளியீடு? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications