தமிழ்நாட்டிற்கு பெருமை.. செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரமா நல்லார் செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களைப் போல போலிகள் உருவாவதை கட்டுப்படுத்துவதும்தான் புவிசார் குறியீடு வழங்குவதன் நோக்கமாகும். ஓரிடத்தில் விளையக்கூடிய பொருள்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருட்களின் தரம், அந்த இடத்தின் காலநிலை, புவியியல் பகுதி, தனித்துவத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

புவிசார் குறியீட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் 'பொருட்கள் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999 என்ற சட்டம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்தக் குறியீடு அளிக்கப்பட்ட பொருட்களை வேறு யாரும் அதே பெயரில் விற்பனை செய்ய முடியாது. இந்தக் குறியீடு 10 ஆண்டுகளுக்கு செல்லும். அதன் பிறகு புவிசார் குறியீடை புதுப்பித்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் முதல் கட்டமாக புவிசார் குறியீடு பெற்றன.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வீரமாநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கூறினார்
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அறிவு சார் சொத்துரிமை அட்டார்னியுமான சஞ்சய் காந்தி, இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த முதல் இடத்தில் உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவாநல்லூர் சவுராஷ்ட்ரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு அதிகாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். 2 ஆண்டுகள் பரிசோதனைக்கு பிறகு இன்று செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த சேலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அணியும்போது குளிர்காலத்தில் வெப்பமாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டம் வாழை சாகுபடியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு வகையான வாழைப்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அதில் மட்டி வாழைப்பழம் புகழ் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டத்தில் அதிகளவில் மட்டி வாழைப்பழம் பயிரிடப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்த இந்த கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் 300 ஆண்டுகளாக நாமக்கட்டிகளை தயாரித்து வருகின்றனர் . இது முக்கியமாக திருநாமத்தை பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக நாமக்கட்டிக்கு சப்ளை செய்து வரும் ஒரே கிராமம் ஜடேரி. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஜடேரி நாமக்கட்டிக்கு இன்று புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.தமிழகத்தில் இதுவரை மொத்தம் 58 பொருட்களுக்கு புவிசார் கிடைத்துள்ளது நாட்டிலேயே அதிக அளவில் புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் தமிழகம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று இதுவரை 17 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் மணப்பாறை முறுக்கு, மானாமதுரை மண்பாண்டங்கள், மார்தாண்டம் தேன், மயிலாடு கற்சிற்பம், ஊட்டி வறுக்கி, ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தன. இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது குறிப்பிடதக்கது.
-
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
Election Exclusive: நான் என்ன வைகோவா? இப்பவே அத்துக்கிட்டு போறேன்.. அடம் பிடிக்கும் தவாக வேல்முருகன்! போனை போட்ட தலைகள்! -
அமைச்சர் பதவி யாருக்கு? சீனியாரிட்டி எல்லாம் Secondary-தான்? மா.செ. கூட்டத்தில் சொன்ன ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications