தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகம் விழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்
Recommended Video

தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் வருடாந்திர மாசி மகம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கடடுப்பாட்டில் இயங்கும் காசி விசுவநாதர் ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது.

வடக்கே உள்ள காசிக்கு நிகரானதாக கருதப்படும் தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பு. அதே போல் இந்த ஆண்டிற்கான மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. கொடிமரத்தை பல்வேறு பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்தஆலய குருக்கள் அபிஷேக தீர்த்தபுனிதநீரை ஓடையில் முறையாக விடாமல் அதனை வாரியல் மூலம் செய்து ஓடையில் கலக்க செய்தது அங்கிருந்த பக்தர்களை முகம்சுளிக்க செய்தது.
#தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகம் விழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம் #tenkasi #kasiviswanathartemple pic.twitter.com/FZIvgvz8LS
— Oneindia Tamil (@thatsTamil) February 11, 2019
இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிறது. நாள் தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும், ரிஷபம், யானை , பூங்கோயில் போன்ற வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

மேலும் விழா காலங்களில் சமய சொற்பொழிவுகள், ஆன்மீக கலை நிகழ்;ச்சிகள், பரதநாட்டிய நிகழச்சிகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 9-ஆம் திருநாளான 18-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications