"விட்டுருங்க..ண்ணா.. தெரியாம பண்ணிட்டோம்".. ஒதுக்குப்புறத்தில் கதறிய காதல் ஜோடி.. அத்துமீறிய கும்பல்
காதல் ஜோடியை மிரட்டிய வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்
நெல்லை: எங்கள விட்டுருங்க..ண்ணா.. ப்ளீஸ்.. தெரியாம தப்பு பண்ணிட்டோம்" என்று கதறுகிறது அந்த காதல் ஜோடி.. பட்டப்பகலில் ஒதுக்குப்புறத்தில் கசமுசாவில் இருந்த இந்த ஜோடியை ஒரு கும்பல் மிரட்டி அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி பதற வைத்து வருகிறது.
நெல்லை மாநகரின் புறநகர் பகுதியான ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அது ஆள்நடமாட்டம் அவ்வளவாக இல்லாத பகுதியாகும்.. சாயங்கால நேரங்களில் லவ் ஜோடிகள் அங்குதான் ஒதுங்குவார்கள்.
அதேபோல பைக் ஓட்டி பழகுபவர்கள்கூட அந்த சாலையில்தான் பழகுவார்கள், சாகசம் காட்டுவார்கள். இப்போது லாக்டவுன் என்பதால் அந்த ரோடு இன்னும் காலியாக உள்ளது.. யாராவது அந்த பகுதிகளில் நடமாடினாலே அவர்களிடம் வழிப்பறி நடப்பதும் அதிகரித்துள்ளது.

மக்கள்
அதனால் அந்த இடங்களில் மக்கள் நடமாடவே அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில்தான் ஒரு காதல் ஜோடி ஒதுங்கி உள்ளது.. அந்த பெண் கல்லூரி மாணவி.. 2 நாளைக்கு முன்பு அங்கு சென்றுள்ளனர்.. யாருமே அங்கு இல்லாததால் கசமுசாவிலும் இறங்கிவிட்டதாக தெரிகிறது.. ஆனால், இதை ஒரு கும்பல் மறைந்திருந்து பார்த்துவிட்டது.. செல்போனிலும் படம் பிடித்து கொண்டது.

மிரட்டல்
பிறகு அந்த ஜோடியிடம் சென்று 2 பேரையும் பிடித்து தரையில் உட்கார வைத்து மண்டியிட வைத்தது. தனித்தனியாக யார் யார் என்ற விவரங்களை மிரட்டி கேட்டது.. வீட்டில் சொல்லிவிடுவோம், வீடியோவை காட்டிவிடுவோம் என்றும் மிரட்டியது.. "எங்களை விட்டுருங்க..ண்ணா.. தெரியாம பண்ணிட்டோம்.. இனிமேல் இங்க வர மாட்டோம்" என்று அந்த பெண் கதறுகிறார்.

வீடியோ
இதையும் வீடியோவாக எடுத்து வைத்து கொண்டது அந்த கும்பல்.. கடைசியில் அவர்களிடம் இருந்த பணம், செல்போனையும் பறித்து கொண்டு தப்பி ஓடியது.. நடந்ததை வெளியே சொன்னால், வீடியோவை வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றது.. இதற்கு பயந்து கொண்டு அந்த காதலர்களும் எதையும் வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார்கள்..

செல்போன்
ஆனால் பணம், செல்போனை பிடுங்கி கொண்டு போன கும்பலோ, அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டனர்.. இது போலீசாரின் கவனத்துக்கும் சென்றது.. அதன்பிறகுதான் வீடியோவில் காதலர்கள் சொன்ன அட்ரஸ், தகவலை வைத்து கொண்டு, அதன் உண்மைதன்மையை அறிய முற்பட்டனர்.. பிறகுதான் அந்த கும்பல் மீது புகார் தரப்பட்டது.. இதன் அடிப்படையில் வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். அந்த வீடியோவில் காதலர்கள் கெஞ்சுவதும், கதறுவதும் மனதை பிசைந்தெடுத்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications