தென்காசி மருதநாயகம் கழுத்தில் ஜொலித்த தங்கம்.. மறைவான இடத்துக்கு சென்ற திருநங்கைகள்.. ட்விஸ்ட்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு பனவடலி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி, கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி சங்கரன்கோவில் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 2 திருநங்கைகள் தொழிலாளியை மறித்து பேச்சுகொடுத்தனர். பின்னர் அவர்கள், தொழிலாளியை அருகில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் திடீரெனகழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துக்கொண்டு திருநங்கைகள் தப்பினார்கள். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்றைக்கு தங்க நகைகள் விலை 91 ஆயிரத்தை தாண்டி உள்ளது. வெறும் இரண்டு மாதத்தில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு 19 ஆயிரம் ரூபாய்க்குமே ஏறி உள்ளது. தங்கம் விலை இரண்டு வருடத்தில் அசுர வேகத்தில் ஏறி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு 50 ஆயிரமாக இருந்த தங்கம் இப்போது 91 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்த வேகத்தில் தங்கத்தின் விலை உயர்வதால், தங்க நகைகளை பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. தங்க நகைகளை வீட்டில்இருந்து திருடுபவர்களும் அதிகமாகி வருகிறார்கள். அண்மை காலங்களில் தங்க நகை திருட்டு சம்பவங்கள் வழக்கத்தை விட அதிகமாகி உள்ளது. அதேபோல் தங்க நகைகளை அணிந்து செல்வோரிடம் வழிபறி செய்வதும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தங்க நகை திருட்டு அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருநங்கைகள் தங்க நகையை வழிபறி செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்குப் பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த கனகராஜ் மகன் மருதநாயகத்திற்கு 38 வயது ஆகிறது. இவா் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி, சங்கரன் கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தாராம். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் இரண்டு போ் மருதநாயகத்தை ஏமாற்றி பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள், மருதநாயகத்தை அருகில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.'
அப்போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துக்கொண்டு 2 திருநங்கைகளும் தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மருதநாயகம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் நடத்திய விசாரணைய்ல, அவரிடம் நகையை திருடியது தளவாய்புரத்தைச் சேர்ந்த திருநங்கைகள் அபர்ணா (34) மற்றும் இசை (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நேற்று அபா்ணா, இசை ஆகிய 2 திருநங்கைகளை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நகை குறித்து விசாரித்த போது, பறித்து செல்லப்பட்ட தங்க நகை வழியில் தவறவிட்டதாக கூறியிருக்கிறார்கள். அதாவது மருதநாயகத்திடம் பறிக்கப்பட்ட தங்க நகை காணாமல் போய்விட்டதாக கூறியிருக்கிறார்கள். இதுதொடா்பாக விசாரணை நடக்கிறது. கூலிதொழிலாளியிடம் தங்க நகை பறித்த திருநங்கைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் சங்கரன் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications