நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் அதிரடி சஸ்பெண்ட்.. யார் இந்த ஜஹாங்கீர் பாஷா தெரியுமா?
திருநெல்வேலி: காரில் கணக்கில் வராத ரூ.11.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஊட்டி நகராட்சி ஆணையராக பணியாற்றிய ஜஹாங்கீர் பாஷா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு அவர் நெல்லை மாநகராட்சியில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஜஹாங்கீர் பாஷா இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகராட்சியின் ஆணையராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சென்னையை சேர்ந்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊட்டி நகராட்சி ஆணையர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார்.

கடந்த நவம்பர் 9 ம் தேதி ஜஹாங்கீர் பாஷா காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ஊட்டி - கோத்தகரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது காரை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
கணக்கில் வராத வகையில் ரூ.11.70 லட்சம் பணம் சிக்கியது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.10 மணி நேரம் விசாரணை நடந்தது. ஆனால் பணத்துக்கு அவர் சரியான பதிலை கொடுக்கவில்லை. இதனால் லஞ்சப்பணம் என்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் உறுதி செய்தனர். அதோடு ஜஹாங்கீர் பாஷா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு கடந்த மாதம் 27 ம் தேதி ஜஹாங்கீர் பாஷாவிற்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. காத்திருப்பு பட்டியலில் இருந்த அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் பிற எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் இன்று ஜஹாங்கீர் பாஷா நெல்லை மாநகராட்சி துணை ஆணையர் பொறுப்பில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக ஆணையர் பிறப்பித்துள்ளார். நெல்லை மாநகராட்சியின் துணை ஆணையர் பொறுப்பில் வேறு நல்ல அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுந்த நிலையில் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications