நெல்லையில் வியப்பு.. திடீர்னு முளைத்த ஆசை.. திகைக்க வைத்த "தாட்டான்பட்டி".. வசப்பட்டது வானம்.. சபாஷ்
நெல்லை: ஒவ்வொருவருக்கும் ஆசைகள் பலவிதம்.. கனவுகள் பலவிதம்.. ஆனால், அந்த கனவுகளை நனவாக்கும் முயற்சியில் இறங்குபவர்கள் வெகுசிலரே.. அந்தவகையில், தங்களது கனவை, கடும் முயற்சி எடுத்து ஒருவழியாக நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் தாட்டான்பட்டி கிராம மக்கள். அப்படி என்ன நடந்தது?
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்துள்ளது வி.கே.புரம்.. இந்த பகுதியில் உள்ளதுதான் தாட்டான்பட்டி என்ற கிராமம்.. கிட்டத்தட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்..

விவசாயம்: இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள்.. பெண்களும்கூட, விவசாயத்தில் இறங்கி உள்ளனர்.. இதைத்தவிர, பீடி சுற்றும் தொழிலிலும் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது, இந்த கிராமத்தில் ராணுவம், காவல்துறை போன்ற அரசு துறைகளிலும் ஏராளமான இளைஞர்கள் சேவை புரிந்து வருகிறார்கள்.. இதன்காரணமாக, ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்கள், அடிக்கடி விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து போவது வழக்கம்.
விமானம்: இளைஞர்கள் ஒவ்வொருமுறையும், இப்படி விமானத்தில் வந்துபோவதை பார்த்த தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் ஆசைவந்துவிட்டது.. தாங்களும் எப்படியாவது ஒரு முறையாவது, விமானத்தில் பறந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.. இப்படி இவர்கள் ஆசைப்பட்டு பல வருடமாகிறது. ஆனாலும், பல காரணங்களால், அதை நிறைவேற்ற முடியவில்லை.. ஒவ்வொரு முறையும் முயற்சி எடுத்தாலும், ஏதாவது ஒரு இடையூறு ஏற்பட்டு, கனவை நிராசையாக்கிவிட்டு சென்றது.
அதனால், தாட்டான்பட்டி கிராம பெண்கள் ஒரு முடிவெடுத்தார்கள்.. இந்த முறை எப்படியாவது தங்களது கனவை நிறைவேற்றுவது என்று உறுதி பூண்டனர். இதற்காக, பணத்தை கொஞ்சம் கொஞ்சம் சேமித்து, விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.. அதன்படியே சிறுக சிறுக சேமித்தும் வந்தனர்.
கோவா: இறுதியில் விமானத்தில் பறக்கக்கூடிய அளவுக்கு ஓரளவு பணமும் சேர்ந்தது. இந்த பணத்தை எடுத்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக, விமானம் மூலமாக கோவா கிளம்பினர்.. அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட மொத்தம் 134 பேர் விமானத்தில் பறந்தனர்.. கோவாவிலுள்ள சவேரியாரை பார்வையிட்டனர்.. இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முன்னதாக, ஃப்ளைட்டில் பறப்பதற்கு முன்பு, கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. அதுமட்டுமல்ல, யாரும் தொலைந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, எல்லாருக்குமே தனியாக அடையாள அட்டைகளிலும், டிரஸ்களிலும், "சிவப்பு நிற துணி"யை அடையாளமாக வைத்து கொண்டனர்.
ஃபிளைட்: இப்படி பல்வேறு பிளான்களை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கு பிறகே கோவாவுக்கு கிளம்பினார்கள்.. போகும்போது ஃபிளைட்டில் சென்றுவிட்டு, அங்கிருந்து ரயில் மூலம் ஊர் வந்து சேரப்போகிறார்களாம். இதில் ஹைலைட் என்னவென்றால், கோவாவுக்கு போகும் பிளைட் டிக்கெட் பணத்தை, இந்த கிராமத்து பெண்கள் 10 வருடம் சேமித்து வைத்தார்களாம்.
ஆக, ஆசைகளும், கனவுகளும் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், ஒன்றை அடைய வேண்டும் என்ற விடாமுயற்சியும், நம்பிக்கையும், திட்டமிடலும் இருந்துவிட்டால், எதுவும் சாத்தியம்தான் என்பதை தாட்டான்பட்டி பெண்கள் நிரூபித்துள்ளனர்... சபாஷ்..!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications