Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயில் பத்திரம்.. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ஃபார்முலா.. கவிதா பண்ண சத்தியம்! பாஜக துணை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் என்று கூறப்படும் கவிதாவுக்கு எதிராக அவரது உடன்பிறந்த சகோதரர் நயன் சிங் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இந்நிலையில், கவிதாவின் மருமகனுக்கு பாஜக துணை நிற்பதாக, மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இருட்டுக்கடை அல்வா கடையின் நிர்வாகத்தை கவிதா - ஹரிசிங் நிர்வகித்து வருகின்றனர். இவர்களது மகள் ஸ்ரீ கனிஷ்காவை கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவர் திருமணம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

Tirunelveli Iruttu Kadai Halwa Shop Will Documents

இந்நிலையில், இருட்டுக்கடை உரிமத்தை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்துவதாக, நெல்லை கமிஷனர் ஆபீசில் புகார் தரப்பட்டது.. மேலும், தன்னுடைய கணவர் லண்டனுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் என கனிஷ்கா இன்னொரு புகாரை தந்துள்ளார்.

உரிமை யாருக்கு

இதையடுத்து, இருட்டுக்கடை உரிமை யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் வெடித்தது. தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங், இருட்டு கடை ஸ்தாபனம் தனக்கு தான் சொந்தம் என பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடையின் முன்னாள் உரிமையாளரான பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தனக்கு சொந்தம் என உரிமை கோருவதாக தெரிவித்துள்ளதாகவும், சட்டப்படி இதில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நயன் சிங் தெரிவித்துள்ளார்.

பல்ராம் சிங் - காஸ்ட்லி கார்

இந்நிலையில், TN Voice Now என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "ரூ.2 கோடி செலவில் மகள் கனிஷ்காவுக்கு திருமணம் நடத்தியிருக்கிறார் கவிதா.. ஒன்றரை கோடி ரூபாய்க்கு பல்ராம சிங்குக்கு, காஸ்ட்லியான கார் வரதட்சணையாக தந்தார்களாம்.. எப்படியும் இந்த திருமணத்திற்கு 10 கோடி செலவில் நடத்தியிருப்பார்கள்.

பல்ராம் சிங்குக்கு கோவையில் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துவந்துள்ளது.. இந்த விஷயம் கனிஷ்காவுக்கு தெரிந்ததுமே, கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.. அந்த பெண்ணுடனான கள்ள உறவை விட்டுவிடும்படியும் எடுத்து சொல்லியிருக்கிறார்.

அதற்கு பல்ராம் சிங், "நான் அவளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே.. யாரும் என்னை ஒன்னும் செய்ய முடியாது" என்றாராம்.. இந்த பல்ராம் சிங்கின் அப்பா யுவராஜ் சிங் ஒரு வழக்கறிஞர் ஆவார்.. இவர்கள் பாஜக பின்னணி கொண்டவர்கள்.. மார்வாடிகளை பாதுகாப்பதே இந்த பிஜேபிதான்.

10 லட்சம் மதிப்பு

இப்போது விஷயம் என்னவென்றால், இருட்டுக்கடை அல்வா கடையை, மருமகன் பல்ராம்சிங், அவரது அப்பா யுவராஜ் சிங் இருவரும் கைப்பற்ற நினைக்கிறார்கள்.. அந்த இடத்தை பொறுத்தவரை வெறும் ரூ.10 லட்சம் மட்டுமே மதிப்பு பெறும். ஆனால், இருட்டுக்கடை அல்வா என்றாலே அதன் ஃபார்முலாதான் முக்கியம். தற்கொலை செய்து கொண்ட ஹரிசிங்குக்கு மட்டுமே அந்த ஃபார்முலா முழுமையாக தெரியும்..

வளர்ப்பு மகளான கவிதாவுக்கு அவர் சொல்லி கொடுத்தாலும், முழுமையாக சொல்லவில்லை. இறப்பதற்கு முன்பு, உன்னுடைய வாரிசு தவிர வேறு யாருக்கும் இருட்டுக்கடை அல்வா ஃபார்முலாவை சொல்லித்தர கூடாது என்று ஹரிசிங் சத்தியம் வாங்கிவிட்டாராம்.. ஹரிசிங்குடன் அந்த ஃபார்முலாவும் சேர்ந்து மரணமடைந்துவிட்டது

ஃபார்முலா

அதனால்தான், ஹரிசிங் தற்கொலைக்கு பிறகு, இருட்டுக்கடை அல்வாவின் சுவை பாதியாக குறைந்துவிட்டது. எனினும், கவிதாவுக்கு மட்டுமே அதன் ஃபார்முலா ஓரளவு தெரியும் என்றாலும், தன்னுடைய மகளை நல்லமாதிரியாக வைத்து வாழ வைத்திருந்தால், கவிதாவே, இந்நேரம் அந்த ஃபார்முலாவை சொல்லியிருப்பார்.

ஆனால், பல்ராம் சிங் கடை உரிமையை எழுதி தரும்படி கேட்டு வருகிறார்கள். 500 கிலோ அல்வா, தினமும் ஒருநாளைக்கு ரூ.2 லட்சம் அளவில் விற்றாலும், 1 லட்சம் கையில்தங்கும். அப்படியானால் வருடத்துக்கு 4 கோடி நிற்கும்.. இதை எப்படி பல்ராம் சிங் நடத்துவார்? அதுவும் பார்முலா தெரியாமல், கடையை மட்டும் எழுதி கேட்டு வருகிறார்.. இவர்களுக்கு பாஜக துணை நிற்கிறது.. எனவே, கணவர் பல்ராம் சிங், அவரது அப்பா யுவராஜ் சிங் இருவரும்தான், கவிதா மகளின் வாழ்க்கைக்கு பதில் சொல்ல வேண்டிய குற்றவாளிகள்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+