திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவிற்கு அல்வா கொடுத்த கும்பல்.. கடைசியில் இப்படி இறங்கிடாங்களே

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி இருட்டை கடை அல்வா பெயரில் சென்னை, கோவை, பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளில் போலியான டிரேட் மார்க்குடன் அல்வா விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதை கண்டுபிடித்தள்ள இருட்டை கடை அல்வா நிர்வாகம் அதை பற்றி விழிப்புணர்வு செய்து பதிவிட்டிருக்கிறது.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்பது இந்தியாவில் புகழ் பெற்ற அல்வா கடையாகும். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் நுழைவாயிலுக்கு எதிரே அல்வா கடை அமைந்துள்ளது. இதன் தனி சுவைக்காக புகழ் பெற்றுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏறும் தென்மாநிலத்தை சுற்றுலா பயணிகள் மறக்காமல் போய் அல்வா வாங்கும் இடமாக இருட்டு கடை தென்னிந்திய சுற்றுலா பயணிகள் இங்கு அல்வா வாங்குவது வழக்கம்.

Tirunelveli Iruttu Kadai Halwa sold under fake trademark in Chennai Coimbatore Bangalore

1940களில் இராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் இந்த இருட்டு கடை துவங்கப்பட்டது, இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்துகிறார்கள். கடை ஆரம்பிக்கப்பட்ட போது ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. மாலை நேரத்தில் தான் இது திறக்கப்படுவது வழக்கம் என்பதால் இருட்டாய் இருக்கும் கடை என்பதே காலப்போக்கில் மாறி 'இருட்டுக்கடை' என்றாகியது.

இருட்டுக்கடை அல்வாவிற்கென்று தனிச்சுவை வரக் காரணம் அல்வா செய்ய பயன்படுத்தும் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கைகளால் தான் அரைப்பது ஒரு காரணம் என்றால், மறு காரணம் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் என்கிறாரகள். இந்த இரண்டு தான் இருட்டு கடை அல்வாவிற்கான தனி சுவைக்கு காரணமாக உள்ளது. சாமி படத்தில் விக்ரம் பாடும் பாடலில் இருட்டு கடை அல்வா குறித்து பாடியிருப்பார். அதன்பிறகு வெளியூர் உள்ளவர்கள் பலருக்கும் இது தான் ரியல் இருட்டு கடை அல்வா எனபது தெரிய ஆரம்பித்தது. இருட்டு கடையை பொறுத்தவரை கைகளால் தான் அல்வா கிண்டுகிறார்கள் என்பதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயார் செய்கிறார்கள்.

Tirunelveli Iruttu Kadai Halwa sold under fake trademark in Chennai Coimbatore Bangalore

திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக் கடை அல்வா பெயரில் போலி கடைகள் நடத்தவும், இந்தப் பெயரை வேறு யாரும் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. ஆனால் திருநெல்வேலி இருட்டை கடை அல்வா பெயரில் சென்னை, கோவை, பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளில் போலியான டிரேட் மார்க்குடன் அல்வா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை கண்டுபிடித்த இருட்டை கடை அல்வா நிர்வாகம் அதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் இருட்டுக்கடை அல்வா மற்றும் முகவரி பற்றி குறிப்பிட்டுள்ளது. மேலும் பாக்கெட்டகளில் நமது பெயரை பயன்படுத்தி விற்கப்படும் போலிகளை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அல்வா கடை நிர்வாகம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+