நெல்லையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை.. 7 மாதங்களில் தீர்ப்பு!
நெல்லை: பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய 14 வயது சிறுமி, தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 7 மாதங்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த கொடூர தந்தையே தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி 7 மாத கர்ப்பமானார். இந்த அதிர்ச்சித் தகவல் வெளியே தெரிந்ததையடுத்து, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர்.

நாங்குநேரி பகுதி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டாக்டர் பிரசன்ன குமார் தலைமையிலான குழுவினர் இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வழிகாட்டுதலின்படி, நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் குறுகிய காலத்திலேயே குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி, பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வலுவான வாதங்களை முன்வைத்தார். 7 மாத கால தொடர் விசாரணைக்குப் பிறகு இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெற்ற மகளைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றம். இது ஒரு மிகப்பெரிய சமூகக் கொடூரம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து தண்டனை விவரங்களை அறிவித்தார்.
குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். மேலும், மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் நடந்த 7 மாதங்களுக்குள்ளேயே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications