திருநெல்வேலி சொரிமுத்து அய்யனார் கோவில் பூசாரி! ஐம்பொன் நகையை மாட்டி கெத்து காட்டினாரே? இப்ப பாருங்க
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலில் இப்போது அரங்கேறியுள்ள ஒரு நிகழ்வு ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைவனுக்குச செலுத்த வேண்டிய காணிக்கையை தன் சொந்த நகையைப போல பூசாரி ஒருவர் கழுத்தில் மாட்டிகொண்டு ஹாயாக வலம் வந்தாராம்.!!
கடந்த மே மாதம் திண்டுக்கல்லை சேர்ந்த தாமோதரன் என்ற பக்தர், சொரிமுத்து அய்யனார் மற்றும் அம்பாள் ஸ்ரீ பூர்ணகலா புஷ்கலா உருவப்படம் பொறிக்கப்பட்ட ஐம்பொன் சங்கிலியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்... இந்த சங்கிலியின் மதிப்பு
சுமார் 26 ஆயிரம் ரூபாய் இருக்கும்.

ஐம்பொன் சங்கிலி
ஆனால் சாமி சிலைக்கு சாத்தப்பட்டிருந்த அந்த சங்கிலி, சிறிது சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கோயில் நிர்வாகத்திற்கு முறையாக தெரிவிக்காமல், சீர் செய்து கொடுப்பதற்காக பூசாரி பிச்சையா என்பவர் செந்தில் என்ற இன்னொரு பூசாரியிடம் அந்த நகையைக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி நடைபெற்ற ஆடி அமாவாசை திருவிழாவின்போது, பக்தர் அய்யனாருக்கு காணிக்கையாக வழங்கிய அந்த ஐம்பொன் சங்கிலியைப் பூசாரி செந்தில் தன் கழுத்தில் அணிந்து கொண்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி கெத்து காட்டியுள்ளார்.
பூசாரியின் அலப்பறை வீடியோ
இந்த அலப்பறை தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைப் பார்த்த நகையை காணிக்கையாக வழங்கிய பக்தர் தாமோதரன், இதுகுறித்து உடனடியாகக் கோயில் நிர்வாகத்திற்கு புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து களத்தில் இறங்கிய கோயில் நிர்வாக அலுவலர் இளங்குமரன் அதிரடியாக விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், பக்தர் மனதார வழங்கிய காணிக்கையை பூசாரி செந்தில் தன் கழுத்தில் போட்டுக்கொண்டு வலம் வந்தது அப்பட்டமாக உறுதி செய்யப்பட்டது. இதனடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறையின் நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவின் பேரில், பூசாரி செந்திலை சஸ்பெண்ட் செய்து கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
200 கிராம் தங்கம்
இதனிடையே, சோசியல் மீடியாவில் இந்த விவகாரம் குறித்து ஒரு தரப்பினர், "அது 200 கிராம் தங்கம்" என்று வதந்திகளை பரப்பி அனலை கிளப்பி வருகின்றனர். ஆனால், இதற்குத் தெளிவுபடுத்தியுள்ள கோயில் செயல் அலுவலர் இளங்குமரன், தாமோதரன் வழங்கிய அந்த மாலையின் மதிப்பு வெறும் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே.. இதுகுறித்துத் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று உறுதி தெரிவித்துள்ளார்.
கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெறாமல், காணிக்கை நகையை சரிசெய்வதற்காக வேறு நபரிடம் கைமாற்றிய பூசாரி பிச்சையா மீது ஸ்ட்ரிக்ட் நடவடிக்கை பாயக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிலின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டியவர்களே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது பக்தர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தெய்வீகத்திற்கு களங்கம் விளைவிக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது...!!


Click it and Unblock the Notifications
