விபத்தில் சிக்கிய விஜய்வசந்த் MP கார்! குறுக்கே வந்த ஆடு! பதற்றத்தில் நிலை தடுமாறிய ஓட்டுநர்!
நெல்லை: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்தின் கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.
விஜய் வசந்த் எம்.பி. கார்: சாலையின் குறுக்கே திடீரென வந்த ஆட்டை காப்பாற்றும் நோக்கில் விஜய் வசந்த் எம்.பி.யின் கார் ஓட்டுநர் காரை வேகமாக திருப்பியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நல் வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி விமான நிலையம்: கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு விஜய் வசந்தின் காரை அவரது ஓட்டுநர் ஓட்டி வந்திருக்கிறார். அப்போது நெல்லை ராஜபாளையபுரம் மேம்பாலம் அருகே கார் விபத்துக்குள்ளானது. நேற்றிலிருந்து கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் சாலையின் குறுக்கே ஆடு வருவதை பக்கத்தில் சென்ற பிறகே கவனித்திருக்கிறார் ஓட்டுநர். காரின் முன் பகுதி மட்டுமே சேதமடைந்ததே தவிர வேறு யாருக்கும் பாதிப்பில்லை.
விஜய் வசந்த் பயணம் செய்யவில்லை: விபத்தில் சிக்கிய இந்தக் காரில் விஜய் வசந்த் எம்.பி. பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னொரு கூடுதல் தகவல் என்னவென்றால், விபத்தில் சிக்கிய இந்தக் கார் விஜய் வசந்த் எம்.பி.யின் பழைய கார் என்பதும் அந்தக் காரில் இப்போது பெரும்பாலும் அவர் பயணிப்பது கிடையாதும் என்பது கவனிக்கத்தக்கது. விஜய் வசந்திடம் முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தும் டிஃபெண்டர் கார் இருப்பதால் இப்போது பெரும்பாலும் அதில் தான் பயணிக்கிறார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: எப்போதாவது தான் தன்னை ஏர்போர்ட்டில் பிக் அப் செய்ய, டிராப் செய்ய பழைய காரை பயன்படுத்துகிறார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் களமிறங்க திட்டமிடுள்ள விஜய் வசந்த் எம்.பி. பெரும்பாலும் இப்போது தொகுதியில் தான் உலா வருகிறார்.


Click it and Unblock the Notifications
