திருநெல்வேலியில் ஒரே பைக்கில் மாமியார்- மருமகன் என 4 பேர்.. நடந்த சின்ன தவறு.. யாருமே உயிருடன் இல்லை
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் வடக்கு புறவழிச் சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் சென்ற நிலையில், அவர்கள் லாரியை முந்த முயன்ற போது விபத்தில் சிக்கினார்கள். இதில் இரு சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா உடனடியாக விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானை அடுத்த ராஜபதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தனது இரு மகள்கள் மற்றும் மாமியாருடன், ஒரே பைக்கில் தச்சநல்லூர் வடக்கு புறவழிச் சாலை உலகம்மன் கோயில் அருகே சென்றுள்ளனர். ஒரே பைக்கில் சென்ற அவர்கள் யாருமே தலைகவசம் அணியவில்லை. எதிர்புறம் சேரன்மகாதேவியில் இருந்து தச்சநல்லூர் பெட்ரோல் கிடங்கிற்கு டீசல் ஏற்ற டேங்கர் லாரி வந்தது. அந்த லாரியை பத்தமடை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கண்ணன், திடீரென முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றாராம். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கணேசனின் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் கண்ணன், அவரது இரண்டு மகள்கள் மற்றும் அவரது மாமியார் என நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்த உடனேயே அருகில் இருந்த பொதுமக்கள் தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேர் உடலையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் டேங்கர் லாரியை பறிமுதல் செய்ததோடு லாரி ஓட்டுநர் கணேசனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே விபத்து நடந்தது குறித்து கேள்விப்பட்டு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் அதிக விபத்து நடக்கும் பகுதிகளாக 27 இடங்களை கண்டறிந்துள்ளோம். விபத்துக்களை தடுக்கும் விதமாக அப்பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டை விட இந்தாண்டில் விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்திருக்கிறது. புறவழிச்சலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க சாலை பாதுகாப்பு கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளோம் இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்துள்ளது" என்று தெரிவித்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications