அது என்ன மெட்ரோ லைட்? சேலம், திருநெல்வேலிக்கு வரப்போகும் அதி நவீன வசதி.. சல்லுன்னு பறக்கலாம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் சேலத்தில் மெட்ரோ ரயிலுக்கு பதிலாக மெட்ரோ லைட் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை, கோவையில் மெட்ரோ அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வுகள் முடிந்துவிட்டன. அங்கே மெட்ரோ அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் முடிந்துவிட்டன. அதேபோல் எந்த ரூட்டில் மெட்ரோ இயக்கப்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

அதேபோல் எங்கெங்கே ஸ்டேஷன்கள் அமைய வேண்டும் என்றும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனால் இங்கே விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும். அதன்பின் இங்கே கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் திருநெல்வேலி மெட்ரோ ரயில் அமைப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை பூர்த்தி செய்யவில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நடத்திய திட்ட சாத்தியக்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருநெல்வேலியில் மெட்ரோ அமைக்கப்படாது. ஆனால் திருநெல்வேலியில் வேறு விதமாக ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மெட்ரோ அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. முக்கியமாக மாநகராட்சிகளில் மெட்ரோ ரயில்களை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 13 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், பாளையம்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 12 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 3-ல் 15 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ நீளத்திற்கு 40 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சேலம்: சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் இரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கி.மீ நீளத்திற்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரித கால போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மாற்றம் வரலாம். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மெட்ரோ லைட்: மெட்ரோ லைட் மெட்ரோவை விட குறைந்த பெட்டிகளை கொண்டு இருக்கும். குறைந்த வசதிகள் இருக்கும். பெரும்பாலும் குறைவான தூரத்திற்கு இயங்கும். ஆனால் அருகருகே ஸ்டாப் இருக்கும்.
அதேபோல் இதன் வேகமும் குறைவாகவே இருக்கும். இது மெட்ரோ லைட் என்பதால் அதிக அளவில் லேன்கள் இங்கே இருக்காது. இங்கவே மெட்ரோ 25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும். அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தொடக்கத்தில் 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும்.












Click it and Unblock the Notifications