வாஞ்சிநாதன் இருக்கட்டும்.. நெல்லை கலெக்டர் ஆஷ் துரையை சுட்டு கொல்ல ‛மாஸ்டர்மைண்ட்’ இவர் தான்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நாளை சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் நாம் அனைவரும் நம் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களை நினைத்து பார்க்க வேண்டும். அந்த வகையில் 1911ம் ஆண்டு வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில் வாஞ்சிநாதன் பிரிட்டிஷ்காரரான திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டு கொன்றார். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வாஞ்சிநாதனின் மாஸ்டர் மைண்ட்டாக இருந்த சாவடி அருணாச்சலம் பிள்ளை பற்றி இன்னும் பலருக்கும் தெரியாது. அவர் யார்? எப்படி ஆஷ் துரையை கொல்ல வாஞ்சிநாதனுக்கு உதவினார் என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

1911 ம் ஆண்டு ஜூன்17 தேதி.. நம் நாட்டில் விடுதலை வேட்கை வீறு கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆங்காங்கே நம் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலம் தான் அது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மணியாச்சி மெயில் ரயில் திருநெல்வேலியில் இருந்து மணியாச்சிக்கு புறப்பட்டு சென்றது.

independence day 2024 independence day

இந்த ரயிலில் தான் திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ் துரை (முழுப்பெயர் ராபர்ட் வில்லியம் டிஎஸ்கார்ட் ஆஷ்) தனது மனைவியுடன் புறப்பட்டு சென்றார். ஆஷ்துரையின் மனைவி பெயர் மேரி. இந்த தம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள். இவர்களின் பெயர்கள் மோலி, ஆர்தர், ஷீலா மற்றும் ஹெர்பர்ட். இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தங்கி படித்து வந்தனர்.

இந்நிலையில் தான் ஆஷ் துரை தனது மனைவி மேரியுடன் மணியாச்சி மெயில் ரயிலில் காலை 10.40 மணிக்கு மணியாச்சி சென்றார். அங்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் இந்தோ - சிலான் போட் மெயில் ரயிலில் பயணிக்க ஆஷ்துரை தனது மனைவி மேரியுடன் மணியாச்சி ரயிலிலேயே காத்திருந்தார். இந்த வேளையில் தான் ஆஷ்துரை தனது மனைவியுடன் இருந்த ரயில் பெட்டிக்குள் 2 பேர் நுழைந்தனர்.

அதில் ஒருவர் கோட்சூட் அணிந்திருந்தார். இன்னொருவர் குடுமி வைத்து பஞ்சகச்சம் கட்டியிருந்தார். அப்போது கோட்சூட் அணிந்து இருந்தவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த 'பிரவுனிங் ஆட்டோமெடிக் பிஸ்டல்' துப்பாக்கியை எடுத்து ஆஷ் துரையை சுட்டு கொன்றார். அதன்பிறகு அவர்கள் 2 பேரும் ஓடினர். இதில் வாஞ்சிநாதன் ரயில்

வே பிளாட்பார்மில் வைத்து துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். ஆஷ்துரையை சுட்டு கொன்றதற்கு முக்கிய காரணம் என்பது அவரது சித்ரவதை தான்.அதாவது 1908 மார்ச் 13ம் தேதி நடந்த ‛திருநெல்வேலி எழுச்சி' போராட்டத்தில் பங்கேற்றதற்காக வஉசி, சுப்பிரமணிய சிவா மற்றும் பத்பநாம ஐயர் ஆகியோரை கைது செய்து ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்தனர். இவர்கள் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டனர். இந்த சித்ரவதைக்கு மூளையாக ஆஷ்துரை இருந்ததால் அவரை வாஞ்சிநாதன் சுட்டு கொன்றார். மணியாச்சியில் ஆஷ்துரையை சுட்டு கொன்றதன் நினைவாக தான் மணியாச்சி எனும் ரயில் நிலையம் தற்போது வாஞ்சி மணியாச்சி என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வருகிறது.இந்த வரலாறு நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் வாஞ்சிநாதன் எப்படி ஆஷ்துரையை சுட்டு கொல்ல தயாரானார். அவருக்கு உதவியது யார்? வாஞ்சிநாதனின் மாஸ்டர்மைண்ட் யார்? என்பது இன்னும் பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதன் விபரம் வருமாறு: வாஞ்சிநாதன் செங்கோட்டையை (தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ளது) சேர்ந்தவர். இவரது நண்பர் பெயர் சாவடி அருணாச்சலம் பிள்ளை. இவரும், வாஞ்சிநாதனும் நெருங்கிய நண்பர்கள். இவர் தான் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டு கொல்ல மாஸ்டர் மைண்ட்டாக இருந்தார். சாவடி அருணாச்சலம் பிள்ளையும் செங்கோட்டையை சேர்ந்தவர் தான்.

இவரது தந்தை பெயர் சாடி சுப்பிரமணிய பிள்ளை. தய் பெய்ர சுவர்ணம்மா. இந்த தம்பதிக்கு 1893ம் ஆண்டு பிறந்தவர் தான் சாவடி அருணாச்சலம் பிள்ளை. இவர் கொல்கத்தா மெடிக்கல் கல்லூரியில் படிக்க தயாராகி வந்தார். மேலும் அவர் பாரத மாதா சங்கத்தில் உறுப்பினராகவும், செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். அப்போது தான் வாஞ்சிநாதனும், சாவடி அருணாச்சலமும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். மேலும் இவர்கள் செயல்பட்ட பாரத மாதா சங்கம் என்பது தென்னிந்தியாவில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சி செய்ய இளைஞர்களை தயார்படுத்தி வந்தது. குறிப்பாக பாரத மாதா சங்கத்தில் செயலாளராக

1908 ல் திருநெல்வேலி எழுச்சி போராட்டத்தில் ஆஷ்துரை அடக்குமுறையை கையில் எடுத்ததால் அவரை கொல்ல திருநெல்வேலி சீமையின் விடுதலை போராட்ட வீரர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து பாரத மாதா சங்கம் ஆஷ்துரையை கொல்வதில் அதிக தீவிரம் காட்டியது. இதுதொடர்பாக தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், தென்காசி, செங்கோட்டை உள்பட பல இடங்களில் ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. குறிப்பாக பாரத மாதா சங்கத்தின் நூலகமாக இருந்த கஸ்பா அழகப்பா பிள்ளையின் வீட்டில் தான் அடிக்கடி மீட்டிங் நடந்தது.

1911 ஏப்ரல் 14ம் தேதி அதாவது ஆஷ் துரையை யார் சுட்டுக்கொல்வது என்பது தொடர்பான முக்கிய மீட்டிங் என்பது செங்கோட்டையில் உள்ள சாவடி அருணாச்சலம் பிள்ளையின் வீட்டில் தான் நடந்தது. இந்த மீட்டிங்கில் தான் ஆஷ் துரையை சுட்டு கொல்ல வாஞ்சிநாதன் தேர்வு செய்யப்பட்டார். பாரத மாதா சங்கத்தை சேர்ந்த மொத்தம் 15 பேர் ஆஷ் துரையை சுட்டு கொல்ல தயாராக இருந்தனர். இதில் சீட்டு குலுக்கி போட்டு பார்த்ததில் வாஞ்சிநாதன் பெயர் வந்தது. இதையடுத்து தான் வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டு கொன்றார். ஒருவேளை வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டு கொல்வதற்கான குறி தப்பும் பட்சத்தில் 2வது நபராக துப்பாக்கிச்சூடு நடத்தும் பொறுப்பை சாவடி அருணாச்சலம் பிள்ளை ஏற்று கொண்டார்.

மேலும் முன்பே சொன்னது போல் வாஞ்சிநாதன் கோட்சூட் அணிந்து சென்று ஆஷ்துரையை ரயிலில் வைத்து சுட்டு கொன்றார். இந்த வேளையில் அவருடன் வேஷ்டி கட்டி சென்றதாக ஒரு நபரை குறிப்பிட்டு இருப்போம். அந்த நபர் தான் சாவடி அருணாச்சலம் பிள்ளை. அவர் குடுமி, பூணுல், கேரளாவில் அணிவது போல் மார்பின் குறுக்காக துணியும், பஞ்சகச்சம் அணிந்திருந்தார். ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டு கொன்ற பிறகு சாவடி அருணாச்சலம் பிள்ளை எஸ்கேப் ஆனார். அதன்பிறகு அவர் கொல்கத்தா மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க சென்றார்.

ஆனால் ஆஷ்துரை கொலை வழக்கை விசாரித்த ஆங்கிலேயர்கள் சாவடி அருணாச்சலம் பிள்ளையை கொல்கத்தாவில் வைத்து கைது செய்தனர். கொல்கத்தா மருத்துவக்கல்லூரி ஹாஸ்டலில் அவர் கைது செய்யப்பட்டார். கை மற்றும் கால்களில் விளங்கு மாட்டி திருநெல்வேலி அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆஷ்துரை கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்ட 14 பேர் மீதும் 1911 ஆகஸ்ட் 11ம் தேதி திருநெல்வேலி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறக ஆகஸ்ட் 18 ல் கூடுதல் குற்றப்பத்திரை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகு வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. மொத்தம் 237 நாள் சிறை வாசத்துக்கு பிறகு சாவடி அருணாச்சலம் பிள்ளை விடுதலை செய்யப்பட்டார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாவடி அருணாச்சலம் பிள்ளை, கஸ்பா அழப்பா பிள்ளை, வேம்பு ஐயமர் தேசியகசாரி உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும் ஆங்கிலேயர்களின் சித்ரவதையால் சாவடி அருணாச்சலம் பிள்ளையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில் இருந்து அவரால் மீண்டும் வர முடியவில்லை.

அதன்பிறகு அவர் காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். ஆயுத போராட்டத்தை கைவிட்டு அறவழி போராட்டத்தில் கவனம் செலுத்தினார். 1919ம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை போராட்டத்தைச் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளில் அம்பாசமுத்திரம் கோமதிசங்கர தீட்சிதருடன் இணைந்து நடத்தியுள்ளார். 1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்யாகிரகத்திற்கு திருநெல்வேலிப் பகுதியிலிருந்து பலரை உற்சாகப்படுத்தி கலந்து கொள்ளச் செய்தார். அதன்பிறகு பொருளாதார ரீதியாக சாவடி அருணாச்சலம் பிள்ளை நலிவடைந்தார். ்வருக்கு மகாகவி பாரதியார் பொருளாதார உதவிகள் செய்தார். கடைசியாக திருநெல்வேலியில் உள்ள எம்டிசி இந்து கல்லூரியில் அவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் 1938 ம் ஆண்டு ஏப்ரல் 27 ம் தேதி காலமானார்.

ஆஷ்துரை கொலை வழக்கில் சாவடி அருணாச்சலம் பிள்ளை விடுதலை செய்யப்பட்டாலும் கூட அவர் வாஞ்சிநாதனுக்கு பக்கப்பலமாக இருந்துள்ளதாக இன்று வரை சொல்லப்படுகிறது. இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். பாரத மாதா சங்கத்தில் ஒன்றாக செயல்பட்டவர்கள் என்பதால் இருவரும் முக்கிய திட்டங்களை பகிர்ந்து ள்ளனர். அதுமட்டுமின்றி ஆஷ்துரையை தீர்த்து கட்டும் முடிவு எடுக்கும் ஆலோசனை கூட்டத்தை சாவடி அருணாச்சலம் பிள்ளை தனது வீட்டில் நடத்தியிருந்தார். ஆஷ்துரையின் நடவடிக்கையை வாஞ்சிநாதனுடன் திருநெல்வேலியில் நோட்டமிட்டு அவருடன் சென்றதும் இந்த சாவடி அருணாச்சலம் பிள்ளை தான். இதனால் தான் ஆஷ் துரையை சுட்டு கொல்வதற்கு வாஞ்சிநாதனின் மாஸ்டர் மைண்ட் சாவடி அருணாச்சலம் பிள்ளை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+