"மாமியார்" கிட்ட நெருங்கி நெருங்கி வந்த நபர்.. யார்னு பாத்தால்? காலையிலேயே அலறல்.. வெலவெலத்த போலீஸ்
திருநெல்வேலி: விடிகாலையில் தூங்கி கொண்டிருந்த மாமியாரிடம் நெருங்கி சென்றுள்ளார் அந்த மர்மநபர்.. அதற்கு பிறகுதான் அந்த கொடுமை நடந்துள்ளது.. மாமியார்களுக்கு நாளுக்கு நாள் கொடுமைகள் அதிகமாகி வருகின்றன.. இப்படி நடப்பது முதல்முறை கிடையாது என்பதுதான் பெருத்த அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சண்முகவேல்- சீதாராமலெட்சுமி தம்பதி... திங்கட்கிழமை அதிகாலை, பால் வாங்குவதற்காக கணவர் வெளியே சென்றுள்ளார்..
பிறகு மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்தபோது, மனைவி சீதாராமலட்சுமி ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்ததை கண்டு அலறினார்.. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்..

சிகிச்சை: தீவிரமான சிகிச்சை தரப்பட்டும், சீதாராமலெட்சுமியை காப்பாற்ற முடியவில்லை.. உடனடியாக போலீசுக்கும் தகவல் தரப்படவும், சீதபற்பநல்லூர் போலீசார் விரைந்து வந்து, விசாரணையை துவங்கினர்.. சீதாராமலெட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையும் மாயமாகியிருந்த நிலையில், யாராவது நகைக்காக அடித்து கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியது...
இதற்கிடையே சீதாராமலெட்சுமியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போது, திடீரென ஒரு மர்மநபர், கையில் கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டில் நுழைவது பதிவாகியிருந்தது.. இதையடுத்து, சீதாராமலெட்சுமியின் குடும்பத்தினர் மொத்த பேரையும் வரவழைத்து வீடியோவில் இருந்த நபர் யார் என்று அடையாளம் காண சொன்னார்கள்.. அந்த நபர் ஜெர்க்கின் அணிந்திருந்தார்.. ஆனால், தலையில் கொண்டையும் போட்டிருந்தார்..
கொண்டை: வீட்டில் இருந்து பதற்றத்துடன் அந்த நபர் வெளியே வருவதும், பிறகு ஹெல்மெட்டை கழற்றியதும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அதற்குபிறகுதான், அந்த நபரை உற்றுப்பார்க்கவும், அவர் சீதாராமலெட்சுமி மருமகள் மகாலெட்சுமி என்று சொன்னார்கள்.. இதைக்கேட்டு போலீசார் ஆடிப்போய்விட்டார்கள்.
மருமகள்தான் மாமியாரை கொன்றது என்று போலீசார் உறுதிசெய்ததையடுத்து, மகாலட்சுமியிடம் விசாரணை நடத்த முயன்றனர்.. ஆனால், மாட்டிக் கொண்டோம் என்ற விஷயம் தெரியாமல், மாமியார் இறப்பால் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருந்தார்.. இதற்கு பிறகுதான், மகாலெட்சுமியை கைது செய்து விசாரித்தனர்..
வாக்குமூலம்: சீதாராமலெட்சுமி ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.. கடந்த 2018ல்தான் மகனுக்கு மகாலட்சுமியை திருமணம் செய்து வைத்துள்ளார்.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. திருமணம் முடிந்த 6 மாதம் தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.. இதற்கு பிறகு, மாமியார் மருமகளுக்குள் கருத்து வேறுபாடு வெடித்தது.. வாக்குவாதம், தகராறும் உருவானது.. இவர்கள் 2 பேரின் தகராறு காரணமாக, மனம் வெறுத்து போனார் சண்முகவேல்..
இதனால், வீட்டுக்கு பின்புறத்திலேயே, புதிதாக ஒரு வீட்டை கட்டி, மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்துவிட்டார்.. அப்படியிருந்தும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாமியார், மருமகள் இடையே மறுபடியும் தகராறு வெடித்துள்ளது.. தெருவெல்லாம் 2 பேரும் கட்டிப்புரண்டு உருண்டு சண்டை போட்டிருக்கிறார்கள்.. சொந்தக்காரர்களும், அக்கம்பக்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி 2 பேரையும் சமாதானப்படுத்தி உள்ளனர்.. ஆனாலும், மருமகள் மீது குறைகளை சபையினர் முன்பு லிஸ்ட் அடுக்கினார்..
இரும்புக்கம்பி: இதுதான் மருமகளுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டதாம்.. அதனால்தான் மாமியாரை தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தாராம். சம்பவத்தன்று ஜெர்க்கின் அணிந்துகொண்டு, ஆண் வேடமிட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார் மகாலெட்சுமி.. தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.. மண்டை உடைந்து படுகாயமடைந்த மாமியார், அப்போதே சுருண்டு விழுந்துள்ளார்..
திருட்டுக்காக நடந்த தாக்குதல் போல் இருக்க வேண்டும் என்று நினைத்து, 5 பவுன் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பியிருக்கிறார்.. மாமியாரை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தபோதுகூட, பக்கத்திலேயே அழுதுகொண்டு இருந்தாராம் மகாலட்சுமி.. இவ்வளவும் போலீசில் வாக்குமூலமாக தந்துள்ளார்..
இதுபோல கடந்த வாரமும் கேரள மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. திருவனந்தபுரம் அடுத்துள்ளது பாலராமபுரம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் வசந்தி.. இவரது இரண்டாவது மகன் பெயர் ரெதீஷ் குமார்... திருமணமாகிவிட்டது.. இவரது மனைவி பெயர் சுகன்யா.
வசந்தி: சம்பவத்தன்று, காலை 6 மணியளவில், பால் வாங்கி வருவதற்காக, பக்கத்தில் இருக்கும் பால் பூத்துக்கு சென்று கொண்டிருந்தார் வசந்தி.. அப்போது, ஒரு இளைஞர் திடீரென, வசந்தியை வழிமறித்து தடுத்து நிறுத்தினார்.. இதனால் பதறிப்போன வசந்தி ஒருகணம் திகைத்து நிற்கவும், அதற்குள் அந்த நபர், பெரிய இரும்பு கம்பியால், வசந்தியை சரமாரியாக தாக்கினார்..
குறிப்பாக, வசந்தியின் காலிலும், தலையிலும் மிகக் கொடூரமாக தாக்கியதில், வசந்தியின் கால் அங்கேயே ஒடிந்துவிட்டது.. வலி பொறுக்க முடியாமல் வசந்தியின் அலறி துடித்தார்.. அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், வசந்தியை தாக்கிய நபர், அங்கிருந்து தப்பிவிட்டார்..
படுகாயம்: படுகாயமடைந்த வசந்தியை மீட்ட பொதுமக்கள், அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. இப்போது வசந்திக்கு தீவிரமான சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது.. இந்த விவகாரம் குறித்து, திருவனந்தபுரம் போலீசார் விசாரணையை துவக்கினர்.. அந்த பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்..
அந்த வீடியோவில், நபர் ஒருவர் பதிவாகி இருந்தார்.. அந்த இளைஞர் யார் என தெரியவில்லை என்றாலும், அவரை பார்ப்பதற்கு ஒரு பெண் போலவே காணப்பட்டார்.. ஒருவேளை, ஆண் வேடமிட்டு, பெண் யாராவது இந்த காரியத்தை செய்திருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
பேண்ட் சட்டை: அதனால், வீடியோவில் அந்த நபர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து, அந்த பகுதி முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான், அது ரெதீஷ்குமார் சட்டை என்பது தெரியவந்தது.. அதாவது வசந்தியின் மகனின் சட்டையை அணிந்து, மருமகள் சுகன்யா இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்..
ரெதீஷ்குமாரின் ஷர்ட், பேண்ட், ஷூ, அணிந்து கொண்டு, அடையாளம் தெரியாதவாறு முகத்தில் முகமூடியையும் அணிந்து கொண்டு, மாமியாரான வசந்தியை மருமகள் சுகன்யா தாக்கியிருப்பது உறுதியானது.. இதற்கு பிறகு சுகன்யாவிடம் விசாரணை ஆரம்பமானது.. ரெதீஷ்குமார் போதைக்கு அடிமையானவராம்.. எப்ப பார்த்தாலும், போதையில் வீட்டிற்கு வந்து, சுகன்யாவை அடித்து துன்புறுத்துவாராம்.. இந்த குடிபழக்கத்துக்கு காரணமே வசந்திதானாம்..
குட்டிச்சுவர்: மகனை இப்படி குட்டிச்சுவராக வளர்த்து வைத்ததுடன், தவறுகளையும் கண்டிக்காமல் தவறியதாலேயே, மாமியார் மீது சுகன்யாவுக்கு அதிக ஆத்திரம் வந்துள்ளது.. அதனால்தான், அவரை தாக்க திட்டமிட்டாராம்.. இப்போது சுகன்யாவை போலீசார் கைது செய்து, ஜெயிலில் வைத்துள்ளனர். ஆண் கெட்டப் அணிந்து, மாமியாரின் கால்களை அடித்து நொறுக்கிய மருமகள் பற்றிதான் கேரளா முழுக்க பேச்சாக இருக்கிறது.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி முடிவதற்குள்ளேயே இன்னொரு அதிர்ச்சி நம்முடைய தமிழகத்தில் நடந்துள்ளது.. இந்த மருமகள்கள் இப்போது, ஜெயிலுக்குள் இருக்கிறார்கள்.. இதனால், அதிர்ச்சி ஒருபக்கம் என்றாலும், இவர்கள் இளம் பெண்கள் என்பதால், மிகுந்த கவலையும் சூழ்ந்து வருகிறது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications